
ஓவர் ஷாப்பிங் இனி ஆகாது!

ஷாப்பிங் பண்ணும்போது நம்ம பட்ஜெட்டுக்கு மேல் பொருட்கள் வாங்கும்போது, ‘நீ ஓவராப் போறே. கொஞ்சம் அடக்கி வாசி’னு மண்டையில் தட்டப் பக்கத்தில் ஓர் ஆள் இருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்? கிட்டத்தட்ட அந்த வேலையைத்தான் செய்யுது அமெரிக்காவின் இந்த ஃபைண்டர் டாட் காம் என்ற (finder.com) வெப்சைட் உருவாக்கி இருக்கிற ‘ஐபேக்2’ என்ற ஆப்ஸ்.
என்ன விஷேசம் இதில் எனப் பார்த்தால், ப்ரோக்ராமிங் பண்ணி வெச்சிருக்கிற ரேட்டைத் தாண்டி நம்மை அறியாமலே ஷாப்பிங் பண்ணும்போது இது அலெர்ட் கொடுக்கும். செட் செய்யப்பட்டிருக்கிற RFID ங்கிற சிஸ்டம் மூலம் பேக்கில் அலாரம் அடிப்பதுடன் தோள்பட்டையில் வைப்ரேசனும் ஆகும். அதுபோக ஆட்டோமேட்டிக்காக பேக் மூடிக்கொள்ளுகிற மாதிரியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

``நுகர்வு வெறி அதிகரிக்கிறதைத் தடுக்கும் தொடக்க முயற்சியாக இதை உருவாக்கினோம். இதில் பேக்குக்கும் ஸ்மார்ட் போனுக்குமான சார்ஜ் ஏத்திக்கிற ஆட்டோமேட்டிக் பவர்பேங்க்கும் இருக்கிறதால் எந்த நேரமும் பேக்கை யூஸ் பண்ணிக்கலாம். இதெல்லாம் பண்றதால் ஷாப்பிங் அடிக்ஷனைக் குறைக்க முடியுமானு நீங்க சந்தேகத்தோட கேட்கிறது புரியுது. இது பெரிய ப்ராசஸிங். முடிஞ்சவரைக்கும் எச்சரிக்கை பண்றதால் பொதுமக்கள் உஷாராக வாய்ப்பிருக்கு. நாம எல்லை மீறி ஷாப்பிங் பண்ணுறோம்கிற விஷயத்தை இது கொண்டுபோய்ச் சேர்க்கிறதே... அதுவே போதும்” என்கின்றனர்.
சரி, இந்த பேக்கோட விலை என்னாவா இருக்கும்னு பார்த்தா $5000 ஆம்... ஷாப்பிங் பண்ற ரேட்டைவிட பேக் விலை அதிகமா இருக்கே ஜி!
- ஜெ.வி.பிரவீன்குமார்