உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

வேஸ்ட் இனி டேஸ்ட்!

வேஸ்ட் இனி டேஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேஸ்ட் இனி டேஸ்ட்!

வேஸ்ட் இனி டேஸ்ட்!

செல்போன் ஒருபக்கம் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குதுனு சொல்லப்பட்டாலும் அதன் மூலமாகப் பல நல்ல விஷயங்களும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஹோட்டலுக்குப் போனா சாப்பிடுறோம். ஆனா, அங்கே வேஸ்ட் ஆகிற உணவுகள் பற்றி என்னைக்காவது யாராவது யோசிச்சதுண்டா?

வேஸ்ட் இனி டேஸ்ட்!
வேஸ்ட் இனி டேஸ்ட்!

லண்டன்ல இரண்டு தொழிலதிபர்கள் ஒருநாள் உக்கார்ந்து யோசிக்கும்போதுதான் இந்த ஐடியா தோன்றியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட எல்லோர் கைகளிலுமே ஸ்மார்ட் போன் இருக்கு. இதன்  மூலமாகவே ஏதாவது தீர்வு கொண்டுவரலாமேனு யோசிச்சு உருவாக்கியிருக்கும் ஒரு மொபைல் ஆப் அங்கே மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதன் பெயர் ‘டூ குட் டு கோ’ (‘too good to go’). பெரிய உணவகங்களில் வீணாகும் டன் கணக்கான உணவுகளை ஆர்டர் செய்து மலிவான விலைக்கு பெற்றுத்தருவதே இந்த ஆப்பின் வேலையாகும். உணவு விலைகள் உணவு வகைகள் என எல்லாமே எந்த ஒளிவுமறைவுமின்றி மிகத்தெளிவாக இதிலே குறிப்பிடப்பட்டு விடுவதினால் இதை உபயோகிப்பது நம்பகமானதாகவும் மிக சுலபமானதாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். சரியான நேரத்தில் தரமாக அதுவும் விலை குறைவாகக் கிடைக்கும்போது யார்தான் விடுவார்கள். இந்த ஆப்பை உருவாக்கி இருக்கும்  தொழிலதிபர்களான  க்ரிஸ் வில்சனும், ஜாமி க்ரம்மியும் ‘ஆப் ஆரம்பித்தது பிசினஸ்தான் என்றாலும்  உண்மையில் அதைத்தாண்டி பெரிய சமூகப்பொறுப்பு இருக்கிறது. ஆண்டு முழுவதும் பல லட்சக்கணக்கில் உணவுகள் வீணாவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு சிறிய முயற்சியாகத்தான் இதைத் துவங்கினோம்’ என்கிறார்கள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும்!   
 
- ஜெ.வி.பிரவீன்குமார்