உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

‘டேட் நைட்’, ‘அயன் மேன் 2’, ‘எக்ஸ்மேன்’, ‘அப்போகலிப்ஸ்’ உள்ளிட்ட படங்களில் திறமை காட்டிய ஒலிவியா முன்  இந்த வார ஹாட் பக்கங்களைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்.

• விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் அதி தீவிர விசுவாசி. அந்த அமைப்பின் விழிப்பு உணர்வு பிரசாரத்துக்காக இரண்டு முறை பப்பி ஷேம் போஸ் கொடுத்திருக்கிறார். #தில்லு லேடி!

• ஒலிவியாவின் தாய் வியட்நாம் போர் காலகட்டத்தில் அகதியாக அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர். அப்பா இங்கிலாந்துக்காரர். # விடைகொடு எங்கள் நாடே!

ஹா[லிவு]ட் டைரி
ஹா[லிவு]ட் டைரி

• சிறுவயதில் ஜப்பானில் வளர்ந்தார் ஒலிவியா. அங்கே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் மாடலாகவும் கலைப் பயணத்தைத் தொடங்கினார். # பியூட்டிஃபுல் ஹிஸ்டரி!

• மேக்ஸிம் இதழின் ஹாட் 100 பெண்கள் லிஸ்ட்டில் தொடர்ந்து மூன்று முறை டாப் டென்னில் இருந்தார். #டைம்பாஸ் ஹாட் நூறுலேயும் நீங்க இருப்பீங்க!

• அம்மணி ஓர் எழுத்தாளரும்கூட. சில பத்திரிகைகளில் தலையங்கம் எழுதியிருக்கிறார். தன் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார். #அழகும் அறிவும் ஒரே இடத்தில்!

• 2006-ல் ‘இன் யுவர் பேன்ட்ஸ்’ என்ற டி.வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அந்த ஊர் சமையல் மந்திரம் ஷோ பாஸ் அது. # முருங்கைக்காய் சமையல் தெரியுமா?

ஹா[லிவு]ட் டைரி

• நடிகர் ஜோயல் கின்னமனை டேட்டியவர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இப்போது அமெரிக்கக் கால்பந்து வீரரான ஆரோன் ரோஜர்ஸை டேட்டுகிறார்.
# என்ன டிசைன் இது?

• உலக அளவில் நடந்த விரல்களால் ஆடும் `ராக்-பேப்பர்-சிஸர்ஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்துகொண்டு கெத்து காட்டியிருக்கிறார். #விரல் வித்தை!

- ஃபாலோயர்