உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

``லவ் டார்ச்சர் அதிகமா வருது!''

``லவ் டார்ச்சர் அதிகமா வருது!''
பிரீமியம் ஸ்டோரி
News
``லவ் டார்ச்சர் அதிகமா வருது!''

``லவ் டார்ச்சர் அதிகமா வருது!''

ஃபேஸ்புக்கில் கல்பனா அக்காவைப் போல `மன்னார்குடி ஏழைமகனின் மெட்டுப்பாடல்கள்' என்ற பெயரில் அதகளம் செய்துகொண்டிருப்பவர் மண்ணை சாதிக். அவரோடு சாட்டியதில்...

``லவ் டார்ச்சர் அதிகமா வருது!''

‘`உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

‘`சொந்த ஊரு மன்னார்குடி. தஞ்சாவூர்ல டிப்ளமோ முடிச்சேன். கடந்த மூணு வருஷமா குவைத்ல வேலை பார்த்துட்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்து பாட்டு பாடுறதுல ரொம்ப ஆர்வம். அப்போ எல்லாம் பயங்கர எதிர்ப்பு இருக்கும். அதுக்குப் பிறகு சமூக வலைத்தளங்கள்ல பாட ஆரம்பிச்சேன். ஏற்கனவே உள்ள பாட்டு மெட்டுகள்ல சொந்தமா என்னோட வரிகளைச் சேர்த்து சமுதாயத்துக்கு ஏத்த மாதிரி பாடினேன். நல்ல ரீச் ஆச்சு. இதுதான் மண்ணை சாதிக்கோட கதை!''

‘‘எல்லா வீடியோவிலேயும் ரொம்பக் கோபக்காரராவே இருக்கீங்களே. என்ன காரணம்?’’

‘`கோபம்ங்கிறது ஒரு உணர்வு. சின்ன வயசுல இருந்து, கண்ணுக்கு எதிரே நடக்கிற அநியாயங்களை ஓரமா நின்னு பார்த்துருக்கேன். அதைப் பார்த்து பார்த்து என்னை அறியாமலேயே எனக்குள்ள ஒரு வெறி வந்துருச்சு. அதுதான் கோபமா மாறி இருக்கு. அதுக்காக எப்போவுமே நான் கோபக்காரன் கிடையாது. நிறைய காமெடி வீடியோ எல்லாம் பண்ணியிருக்கேன். அதையெல்லாம் நீங்க பார்த்தது இல்லையா?''

‘`உங்க வீடியோவைப் பார்த்து வலைத்தளங்களில் கிண்டல் பண்றாங்களே?''

‘`ஆமா நிறையவே பண்றாங்க. எல்லாம் என்மேல உள்ள பொறாமை தான். சமூகக் கருத்துகள் எல்லாம் சொல்றதால எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இவ்வளவு பேர் எனக்கு ஆதரவா இருக்குறதைப் பார்த்து, பொறாமையில் இப்படிப் பண்றாங்க. இதையெல்லாம் பார்த்தால் சமுதாயத்துக்கு ஒண்ணும் பண்ண முடியாது.''

‘`சமீபத்துல ‘வாட்ஸ்அப்ல முத்தம் கொடுக்குறாங்க'ன்னு சொல்லி வீடியோகூட போட்டிருந்தீங்க. அதோட பின்னணி என்ன?’’

``லவ் டார்ச்சர் அதிகமா வருது!''

‘`நிறைய லவ் ப்ரொப்போஸ் வருது. ப்ரொப்போஸ்னு சொல்றதைவிட லவ் டார்ச்சர்தான் அதிகமா இருக்கு. பெண்கள் புகைப்படத்தை மாஃபிங் செஞ்சு நிறைய பேர் பரப்பி விடுறாங்க. அதை எதிர்த்து நான் பண்ணுன வீடியோவுக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைச்சுருக்கு. பெரும்பாலும் இலங்கை மலேசியாவில் இருந்துதான் இந்த மாதிரி அதிகம் வந்துக்கிட்டு இருக்கு. நைட்லகூட நிம்மதியா தூங்க முடியல. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு. அதெல்லாம் சொல்லிப்புரிய வச்சாலும் டைவர்ஸ் பண்ணிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றாங்க.''

‘`ஓ... வலைத்தளத்துலயே போராடுறீங்களே. நேரில் வந்து போராட மாட்டீங்களா?’’

‘`நீங்க ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கணும். ஒரு மேடை போட்டு அதில் பேசினா, அந்த மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு மட்டும் தான் கேட்கும். ஆனா வலைத்தளங்கள், நான் பேசுவதை உலகம் முழுதும் கொண்டு செல்லுது. குவைத்துல ஆதரவற்ற நிலையில இருந்த ரெண்டு பேரை ஊருக்கு அனுப்பியிருக்கேன். பீப் சாங்குக்கு எதிரா பேசியிருக்கேன்!''

‘`வேற என்ன மாதிரியான அனுபவங்களைச் சந்திச் சிருக்கீங்க?’’

‘`தேர்தல் நேரத்துல வீடியோ போட்டிருந்தேன். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பல... எனக்கு அந்தக் கட்சியில இருந்து  நிறைய கொலை மிரட்டல்களெல்லாம் வந்துச்சு. எல்லாத்தையும் மீறித்தான் பண்றேன். இதே மாதிரி மலேசியாவில் ஒரு பிரச்னைக்கு எதிரா குரல் கொடுத்தேன். அப்போதும் எனக்குக் கொலை மிரட்டல் வந்துச்சு.''

‘`சரி உங்களோட அடுத்த இலக்கு என்ன?’’

நிறைய குறும்படங்கள் வாய்ப்பு வருது. சினிமாவுல நடிக்க பேசிக்கிட்டு இருக்காங்க. சினிமா ரூட்டைப் பிடிச்சு அரசியலுக்குள்ள போகணும். சீக்கிரமே அரசியலுக்கு வருவேன்.''

‘‘நீங்களுமா..?'' என்றபடி சாட்டை முடித்துக்கொண்டேன்!

- ந.புஹாரி ராஜா