
FOREIGN சரக்கு!

நிறவெறி, பிரபலங்களையும் விட்டு வைப்பதில்லை. ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஸெண்டாயா ஒரு கடையில் சென்று கிஃப்ட் கார்டு வாங்கியிருக்கிறார். ஸெண்டாயா கறுப்பினத்தவர் என்பதால் அவரைப் பாரபட்சமாக நடத்தியிருக்கிறார் கடைக்காரர். கொதித்தெழுந்த ஸெண்டாயா, சோஷியல் மீடியாவில் தன் வருத்தத்தைப் பதிவு செய்ய, கடைக்குக் கண்டனங்கள் குவிந்திருக்கின்றன. இதனால் ஜெர்க் ஆன கடை நிர்வாகம் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறது. நெருப்புடா!

இந்த மாதம் பிரேக் அப் மாதம் போல. சமீபத்திய முறிவு பாப் பியூட்டியான டெய்லர் ஸ்விஃப்ட். ஹாலிவுட் நடிகரான டாம் ஹிடில்ஸ்டனை மூன்று மாதங்களுக்கு முன்புதான் டேட்டத் தொடங்கினார் டெய்லர் ஸ்விஃப்ட். பப்ளிக்காக முத்தம் கொடுப்பது, ஊர் சுற்றுவது எனக் களேபரம் செய்தவர்கள் இப்போது பிரிந்தேவிட்டார்கள். காரணம், டாம் அநியாய பப்ளிசிட்டி பைத்தியமாக இருப்பதை டெய்லரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையாம். இதென்னய்யா புதுசா இருக்கு?

அமெரிக்க நடிகையான எமிலி ரடாஜ்கோவ்ஸ்கி தன்னுடைய பரபர அரசியல் ஸ்டேட்மென்ட்களுக்குப் பெயர் போனவர். இதனாலேயே சோஷியல் மீடியாக்களில் அநியாயத்துக்கு வறுபடுகிறார். ‘பெண்கள் அரசியலே பேசக் கூடாது என நினைக்கிறார்கள். நான் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் இன்னும் பேசுவேன் ஸ்டைலா, கெத்தா’ என கபாலி ஸ்டைலில் பதிலடி கொடுத்திருக்கிறார் இந்த தில்லு லேடி. மகிழ்ச்சி!

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்ஷேசன் ஐஸா கோன்சலஸ். பாப்பரஸிகள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை அம்மணியைத் தொடர்ந்து முற்றுகையிடுகிறார்கள். காரணம், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியாம் ஹேம்ஸ்வொர்த் என ஆணழகன்களை அம்மணி தொடர்ந்து டேட்டுவதுதான். லேட்டஸ்ட்டாக கால்வின் ஹாரிஸை டேட்டிங் செய்யத் தொடங்கியிருக்கிறார். ‘அடுத்த ஸ்டோரி ரெடி!’ என தம்ஸ்-அப் காட்டுகிறார்கள் பாப்பரஸிகள். எத்தனை!