உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

மாஸ் பைக்!

மாஸ் பைக்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாஸ் பைக்!

மாஸ் பைக்!

மாஸ் பைக்!

ப்படியாவது ஒரு பைக் வாங்கிடணும்ங்கிறது இளைஞர்களோட கனவு...ஆனா ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வித்தியாசமான ஆசை. உலகத்திலேயே வெயிட்டான பைக்கை உருவாக்கி ஓட்டணும்கிறதுதான் அது. கனவாக இருந்ததை நனவாக்கி  சாதிச்சும் காட்டி `எப்பூடீ...' என சந்தோசம் பொங்க வலம் வருகிறார்.

மாஸ் பைக்!

ஸ்க்லெஸ்விக் ஹோல்ஸ்டினில் வசிக்கும் 49 வயதான ஃப்ரான்ங்தோஸ் தான் அந்தச் சாதனைக்காரர். கடந்த  மார்ச்  மாதத்தில் பைக்கை வடிவமைக்க ஆரம்பித்த மனுசன் செப்டம்பரில் பணியை முடித்து, கிட்டத்தட்ட 5,000 பேர் முன்னிலையில் ஓட்டிக் காண்பித்து அசத்தியிருக்கின்றார். இந்த பைக்குக்குச் செலவிட்ட தொகை $4700. `இவ்வளவு செலவு பண்ணியிருக்கீங்களே... அந்த அளவுக்கு இது வொர்த்தா?' எனக் கேட்டால், `எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிதான்!' என பதிலளிக்கிறார் ஃப்ரான்கின் மனைவி ஆஸ்ட்ரிட்.  `என் கணவரை எல்லோரும் பாராட்டுவதால் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறேன். 860 கிலோ பைக்தான் இதுவரைக்கும் சாதனையாக இருந்தது. 1.08 டன்னில் இவர் உருவாக்கிய இந்த பைக் இப்போது உலக சாதனைங்கிறப்போ இதைவிட என்ன வேணும். என் கணவரை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு' எனக் கண்கள் பனிக்க, இதயம் இனிக்க பதில் வருகிறது... ஹ்ம்ம்ம்! இந்தப் பணத்தில் நம் ஊர் பைக் எத்தனை வாங்கலாம்னுதானே யோசிக்கிறீங்க மக்களே? மைண்ட்வாய்ஸ் இங்கே கேட்குது!

- ஜெ.வி.பிரவீன்குமார்