மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - தொகுப்பு : கா.பாலமுருகன், இளங்கோ கிருஷ்ணன்

எழுத்துக்கு அப்பால்! - தொகுப்பு  : கா.பாலமுருகன், இளங்கோ  கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - தொகுப்பு : கா.பாலமுருகன், இளங்கோ கிருஷ்ணன்

இங்கேயும்... இப்போதும்...படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார், கா.முரளி,

எழுத்துக்கு அப்பால்! - தொகுப்பு  : கா.பாலமுருகன், இளங்கோ  கிருஷ்ணன்

சக்தி செல்வி

“இயலாமையும் ஆற்றாமையும் அழுத்தும் தருணங்களை... என்னைப் பாதிக்கும் விஷயங்களையே கவிதைகளாகப் பதிவுசெய்கிறேன். குடும்பம் என் கவிதை உலகின் மையச்சரடாக இருந்தாலும், மறுபுறம் இந்தச் சமூகமும் என்னை எப்போதும் கவிதை எழுதும் கணங்களை நோக்கித் தள்ளியபடியே இருக்கிறது.”

‘சிநேகத்தின் வாசனை’ என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் அறிமுகமான சக்தி செல்வியின் இயற்பெயர் தமிழ்ச்செல்வி. கோவை, குனியமுத்தூரில் அரிசி மற்றும் மளிகை மொத்த வியாபாரம் செய்துவருகிறார். ‘கடைத்தெருவின் கதைகள்’ என்ற பெயரில் தன் அனுபவங்களைத் தொகுக்கும் முயற்சியில் உள்ளார்.

பா.ராஜா

எழுத்துக்கு அப்பால்! - தொகுப்பு  : கா.பாலமுருகன், இளங்கோ  கிருஷ்ணன்

‘‘ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளாகவே வேலைக்குச் செல்லவேண்டிய குடும்பச் சூழல். கிடைத்த புத்தகங்களை வாசித்து, நானாகவே  முயற்சித்த சுயக்கல்விதான் என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.’’

சேலம் அல்லிக்குட்டையில் வசித்துவரும் பா.ராஜா, விசைத்தறி ஓட்டுநர். பகல், இரவு என மாறி மாறி வரும் ஷிஃப்ட். இளம் கவிஞர். சிறுகதைகளும் எழுதிவருகிறார். ‘மாயப்பட்சி’ எனும் கவிதைப் புத்தகத்தால் கவனம் பெற்றவர். 

பொன்.இளவேனில்

எழுத்துக்கு அப்பால்! - தொகுப்பு  : கா.பாலமுருகன், இளங்கோ  கிருஷ்ணன்

“வலைகளால் சூழப்பட்ட வாழ்வை எழுதுகிறேன். எழுத்துக்குள் புதைந்துபோவதுதான் என் ஆசுவாசம்.”

கோவை, இருகூரில் வசித்துவரும் பொன்.இளவேனிலின் இயற்பெயர் பொன்னுச்சாமி. நீதித் துறையில் ஓட்டுநராகப் பணியாற்றும் கலைஞன். ‘மணல் சிற்பம்’, ‘பியானோ மிதக்கும் கடல்’, ‘குட்டி ராட்டாந்தூரி’, ‘ஒளி செய்தல்’ போன்ற இவரின் கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கன. சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் எனத் தீவிரமாக இயங்கிவருபவர்.

கவிஞர் பீனிக்ஸ்

எழுத்துக்கு அப்பால்! - தொகுப்பு  : கா.பாலமுருகன், இளங்கோ  கிருஷ்ணன்

“எளிய மனிதர்களே பிரமாண்டங்களை உருவாக்குபவர்கள் என்பதை நம்புபவன் நான். எனது கவிதைகளுக்கான கருவை எனது ஆட்டோவும் பயணங்களும் வாழ்வியலும்தான் தீர்மானிக்கின்றன.”

பீனிக்ஸ், திருவண்ணாமலைக்காரர். இயற்பெயர் கண்ணபிரான். ‘TN25 -1435 - ஆட்டோவிற்குள் உறங்கும் ஆத்மா’, ‘புராதனக் காற்று’, ‘தூக்குமரம்’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மக்களின் நாடிபிடித்து எழுதும் கவிஞனின் படைப்புகளே காலம் கடந்து நிற்கும் என நம்பும் பீனிக்ஸ், 26 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.