மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்

ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்

ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்

ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்

து மிகவும் தெளிவாக இருப்பதால், பார்க்கக் கடினமானதாக இருக்கிறது.ஒருமுறை மூடன் ஒருவன் நெருப்பை லாந்தர் விளக்கின் உதவியோடு தேடிக்கொண்டிருந்தான். தீயென்றால் என்ன என்று அவனுக்குத் தெரிந்திருந்தால், அவன் இன்னும் விரைவாகத் தன் சோற்றைச் சமைத்திருப்பான்.

ஜென்னின் முதல் மூதாதையான போதிதர்மர், ஆறாவது நூற்றாண்டில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஜென்னை எடுத்துச் சென்றார் என்று சொல்லப்படுகிறது. ஜென் என்பது என்ன? ஒரு பொருளா? ஒரு மதமா? பாதையா? கலையா? தத்துவமா? இவையும் இன்னும் பல வடிவங்களாகவும் அறியப்படும் ஜென், உண்மையில் மலரும் ஓர் அனுபவம். பல நூற்றாண்டுகளாக மனித மனம் தேடியலையும் ஒரு ‘பொருளை’ ஒரு வார்த்தையாலோ, மௌனத்தாலோ நமக்கு உணர்த்துவது. ஒரு ஜென் குரு எப்போதும் யாருக்கும் போதிப்பது இல்லை. அவர் வாழ்கிறார். அவரது வாழ்வுதானே ஜென்.

‘ஜென் சதை ஜென் எலும்புகள்’ எனும் இந்த நூல், ஜென் குறித்த பல மகிழ்ச்சியான அனுபவங்களுக்கும் அறிதலுக்கும் நம்மை எளிமையாக இட்டுச் செல்கிறது. நான்கு பகுதிகளைக் கொண்ட நூலின் முதல் பகுதி, 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 108 ஜென் கதைகளைக்கொண்டது.

‘வாசலற்ற வாசல்’ எனும் இரண்டாவது பகுதி, அதே காலகட்டத்தில் வாழ்ந்த ‘முமோன்’ எனும் குருவின் 49 கதைகளையும் அதையொட்டிய சிறு இடையீட்டு உரையாடலையும் கொண்டது. ‘10 காளைகள்’ எனும் மூன்றாவது பகுதி, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `காகுவான்’ எனும் குரு எழுதியது. தாவோயிசத் தத்துவத்தின் காளை ஓவியங்களை அடிப்படையாகக்கொண்ட 10 காளை ஓவியங்களும் அதற்கு அவர் எழுதிய செய்யுள் மற்றும் உரையும் அடங்கியது. நான்காவது பகுதி, இந்தியாவைச் சேர்ந்த பழைமையான ‘மையப்படுத்துதல்’ என்னும் 112 போதனை வழிகளைக்கொண்டது. சிவா தன் மனைவி தேவியிடம் உச்சாடனம் செய்யும் வடிவில் எழுதப்பட்டது.

`ஜென் என்றால் என்ன?’ என்ற கேள்வியோடு நூல் முடிவுறுகிறது. அதற்குப் பக்கத்தில் பதில்: என்ற இடம் வெற்றிடமாக விடப்பட்டிருக்கிறது. ஒரு ஜென் நூல் இப்படித்தானே நிறைவுற முடியும்?  அமெரிக்கர்களான பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி ஆகிய இருவரால் தொகுக்கப்பட்டது. தமிழில் சேஷையா ரவி மொழியாக்கம் செய்திருக்கிறார். ஜென் சிந்தனைகளை விளக்கும் முக்கியமான ஒரு செவ்விலக்கிய நூல், இந்த ‘ஜென் சதை ஜென் எலும்புகள்.’  

நூலில் ஓர் இடத்தில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது. `உங்களுக்கும் இது நடக்கலாம். பளிச்சிடும் ஒரு கணத்தில் ஏதோ ஒன்று திறக்கிறது. நீங்கள் முற்றிலும் புதிய மனிதனாகிறீர்கள். நீங்கள் அதே அதுவல்லாத உலகத்தைப் புதிய கண்கொண்டு பார்க்கிறீர்கள்.’  

ஆம். கொஞ்சம் முயன்றால்... உங்களுக்குள்ளும் ஏதோ ஒன்று திறந்துகொள்ளலாம்.

நூலில் இருந்து...

குற்றப்பழியை உண்ணுதல்

ஒருநாள் சந்தர்ப்பச் சூழ்நிலையால், ஃபுகை என்னும் சோடோ ஜென் குருவுக்கும் அவர் சீடர்களுக்கும் இரவு உணவு தயாரிப்பது தாமதமாகிவிட்டது. சமையல்காரர் கூர்மையான கத்தியோடு அவசர அவசரமாக தோட்டத்துக்குச் சென்று, பசுமையாக இருந்த காய்கறிகளின் மேற்பகுதியை மட்டும் வெட்டி அவற்றைச் சேர்த்து துண்டு துண்டாக நறுக்கி, சூப் தயாரித்தார். அவசர அவசரமாகச் செய்ததால், காய்கறித் துண்டுகளில் ஒரு பாம்புத் துண்டும் கலந்துவிட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை.

ஃபுகையின் சீடர்கள் சூப்பைக் குடித்துவிட்டு ஒருபோதும் இதுமாதிரி சுவையான சூப் சாப்பிட்டதில்லை என நினைத்தனர். ஆனால், கிண்ணத்தில் பாம்புத் தலையைக் கண்டுகொண்ட குரு, சமையல்காரரை வரவழைத்தார். கையில் பாம்புத் தலையைப் பிடித்துக்கொண்டு, உரிமையுடன், ‘என்ன இது?’ என்று கேட்டார்.

‘அடடே, நன்றி குரு’ என்று பதிலளித்த சமையல்காரர், அந்தத் துண்டை வாங்கிச் சட்டென்று வாயில்போட்டு சாப்பிட்டுவிட்டார்.

ஜென் சதை ஜென் எலும்புகள்
வெளியீடு: அடையாளம்
1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்-621310
பக்கக்கள்: 194, விலை: 160/-