
120 புத்தகங்கள்!ஓவியம் : கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்ஸி

இன்றைய அளவு அபத்தமான, ஆபத்தான நிலைமையில், தமிழ்நாட்டு அரசியல் அன்று இல்லை. அது கொள்கைவாதிகளும் கோட்பாட்டாளர்களும் நிரம்பியது. சமூக சேவகர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் நிரம்பியது. தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்துத் தேசியம், சர்வதேசியம், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம்... என எந்தத் தத்துவத்தை முன்னெடுத்தாலும் அவர்களது சிந்தனை, செயல், போராட்டம், வாதம், பிரதிவாதம் அனைத்துமே தங்களது கோட்பாடுகளை வென்றெடுப்பதாகவே அமைந்திருந்தது. இன்று மிக மோசமானவர்கள் கையில் அரசியல் நிலைக்களம் போய்ச் சேர்ந்தாலும், மிக மிக மோசமானதாக சூழ்நிலை மாறாமல் இருப்பதற்குக் காரணம், அந்த ஆளுமைகள் அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான். அந்த அடித்தளத்தை உணர்வதற்கான தேடுதலில் விடை தேடும் பிரதிகள்தான் இவை.
தமிழகத்தின் கடந்தகால அரசியலை, வரலாற்றை, நிகழ்வுகளை உணர, முன்னோட்டமாக சிலவற்றைப் படித்தாக வேண்டும். அப்படி அவசியம் படித்தாக வேண்டிய புத்தகங்கள் இவை. பட்டியல் என்பது தொகுப்பவனின் குணம் சார்ந்தது. அந்த அடிப்படையில் முழுமையைக் கண்டடைவது சிரமம். முழுமையை நோக்கிய நகர்வுக்கு இந்த 120 புத்தகங்கள் நிச்சயம் வழிகாட்டியாக அமையும்!

தொகுப்புகள் நூல்கள்
1. அயோத்திதாசர் சிந்தனைகள் - பதிப்பு: ஞான அலாய்சிஸ்
2. பெரியார் களஞ்சியம் - பதிப்பு: கி.வீரமணி
3. பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் - பதிப்பு: வே.ஆனைமுத்து
4. டாக்டர் அம்பேத்கர் நூல்கள் - பதிப்பு: அம்பேத்கர் ஃபவுண்டேஷன்
5. மகாத்மா காந்தி சிந்தனை தொகுதிகள்
6. இந்திய சரித்திரக் களஞ்சியம் - சிவனடி பதிப்பு: அ.வெண்ணிலா
7. தமிழக வரலாறு வரிசை - அமிழ்தம் வெளியீடு
8. ஸ்ரீகுருஜி கோல்வாக்கர் சிந்தனைக் களஞ்சியம்
9. தம்பிக்கு கடிதங்கள் - பேரறிஞர் அண்ணா
10. விடுதலை வேள்வியில் தமிழகம் - தொகுப்பு: ஸ்டாலின் குணசேகரன்
இதழ் தொகுப்புகள்
1. தத்துவ விவேசினி - பதிப்பு: பேராசிரியர் வீ.அரசு
2. ஆதிதிராவிடன் - பதிப்பு: இரா.பாவேந்தன்
3. நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு - தொகுப்பு: பெ.சு.மணி
4. பாரதி கருத்துப்படங்கள் - பதிப்பு: ஆ.இரா.வேங்கடாசலபதி
5. ஜனசக்தி தலையங்கங்கள் (1937- 1963), பதிப்பு - வீ.அரசு
6. புதுவை முரசு இதழ்கள் - தொகுப்பு: வாலாசா வல்லவன்
7. ம.பொ.சியின் தமிழன் குரல் - தொகுப்பு தி.பரமேசுவரி
8. சமரன் இதழ், தொகுப்பு: வ.மோகனகிருஷ்ணன்
9. மக்கள் பண்பாடு - தொகுப்பு: மணிகோ பன்னீர்செல்வம்
10. மாலை முரசு - மாலை சுவடுகள்
கட்சி, அமைப்புகள் வரலாறு
1. காங்கிரஸ் மகாசபை சரித்திரம் - பட்டாபி சீத்தாராமையா
2. நீதிக்கட்சி வரலாறு - க.திருநாவுக்கரசு
3. விடுதலைப் போரில் தமிழகம் - ம.பொ.சி.
4. இந்தியக் கம்யூனிச இயக்க வரலாறு - அருணன்
5. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1917 - 64) - என்.ராமகிருஷ்ணன்
6. முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி, தமிழ்நாடு மற்றும் சென்னை (1930-47) - ஜே.பி.பி. மோரே, தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி
7. தமிழ்நாட்டு வரலாறு - கே.ராஜய்யன், தமிழில் சா.தேவதாஸ்
8. தி.மு.க. வரலாறு - டி.எம்.பார்த்தசாரதி
9. தமிழக அரசியல் வரலாறு - ஆர்.முத்துகுமார்
10. தமிழ்த்தேச அரசியல் போராட்டம் - பொழிலன்
வாழ்க்கை வரலாறு
1. சிங்காரவேலு, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் - கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம்
2. தந்தை பெரியார் - கவிஞர். கருணானந்தம்
3. ராஜாஜி வாழ்க்கை வரலாறு - ராஜ்மோகன் காந்தி, தமிழில்: கல்கி ராஜேந்திரன்
4. டாக்டர் வரதராஜுலு வரலாறு - பழ.அதியமான்
5. ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும் - விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்
6. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் - மு.வளர்மதி
7. ஜீவா என்றொரு மானுடன் - பொன்னீலன்
8. தமிழ்நாட்டில் காந்தி - அ.ராமசாமி
9. பாவலரேறு பெருஞ்சித்திரனார் - பொழிலன்
10. எம்.ஜி.ஆர். நிழலும் நிஜமும் - கே.மோகன்தாஸ்
தன் வரலாறு
1. வாழ்க்கைக் குறிப்புகள் - திரு.வி.க.
2. ஜீவிய சரித்திரச் சுருக்கம் - இரட்டைமலை சீனிவாசன்
3. ஒரு சூத்திரனின் கதை - ஏ.என்.சட்டநாதன், தமிழில்: கே.முரளிதரன், ஆ.திருநீலகண்டன்
4. சுயசரிதை - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
5. தென்னிந்தியாவைக் கண்டேன் - அமீர் ஹைதர்கான்
6. எனது போராட்டம் - ம.பொ.சி.
7. நெஞ்சுக்கு நீதி - கலைஞர் கருணாநிதி
8. நான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்.
9. வனவாசம் - கண்ணதாசன்
10. ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - ஜெயகாந்தன்
தனிமனித வாழ்வியல் குறிப்புகள்
1. புரட்சிப் பாதையில் எனது பயணம் - பி.சுந்தரய்யா
2. நினைவு அலைகள் - டி.எஸ்.எஸ். ராஜன்
3. காலம் - எம்.கல்யாணசுந்தரம்
4. தூக்குமர நிழலில் - சி.ஏ.பாலன்
5. நினைவலைகள் - திருவாரூர் தங்கராசு
6. மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் - புலவர் கலியபெருமாள்
7. ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - பசு.கவுதமன்
8. நான் எப்படி கம்யூனிஸ்ட் ஆனேன் - வி.பி.சிந்தன்
9. எத்தனை மனிதர்கள்? - சின்னக்குத்தூசி
10. இங்கும் ஒரு குருட்சேத்திரம்- இரா.குசேலர்
முக்கிய நிகழ்வுகளின் பதிவுகள்
1. திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு - பி.யோகீசுவரன்
2. தமிழக வடக்கெல்லைப் போராட்டங்களும் தணிகை மீட்சியும் - கோல்டன் ந.சுப்பிரமணியம்

3. முதுகுளத்தூர் கலவரம், முதுகுளத்தூர் பயங்கரம் - தினகரன், டி.எஸ்.சொக்கலிங்கம்
4. 1957 முதுகுளத்தூர் கலவரம் யார் காரணம்? - க.பூபதிராஜா
5. தில்லை கோயிலும் தீர்ப்புகளும் - சிகரம் ச.செந்தில்நாதன்
6. சாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் - திருச்சி செல்வேந்திரன்
7. நின்று கெடுத்த நீதி - வெண்மணி வழக்கு பதிவுகளும் தீர்ப்புகளும் - தமிழில்: மயிலை பாலு
8. சேரன்மாதேவி - பழ.அதியமான்
9. என்று முடியும் இந்த மொழிப்போர் - அ.ராமசாமி
10. தினத்தந்தி - வரலாற்றுச் சுவடுகள்
வரலாற்றியல் விமர்சனம்
1. இந்தியத் தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - பெ.சு.மணி
2. இந்தியத் தேசியத்தின் தோற்றம் - கோ.கேசவன்
3. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும் - கு.ச.ஆனந்தன்
4. இந்தியத் தேசியமும் திராவிடத் தேசியமும் - குணா
5. பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
6. தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும் - கு.நம்பி ஆரூரன்
7. காங்கிரஸ் வரலாறு மறைக்கப்பட்ட உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும் - கி.வீரமணி
8. திராவிட இயக்கமும் வேளாளரும் - ஆ.இரா.வேங்கடாசலபதி
9. பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் - சுப.வீரபாண்டியன்
10. தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கமும் அதன் பாரம்பர்யமும் - ஏ.என்.சட்டநாதன்
விவாத எதிர்விவாத நூல்கள்
1. ஆரிய மாயையா திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் - பி.ராமமூர்த்தி
2. விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் உண்மை வரலாறு - கி.வீரமணி
3. உடையும் இந்தியா? - ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் - ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்த நீலகண்டன்
4. திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - மலர் மன்னன்
5. திராவிடத்தால் வீழ்ந்தோம் - குணா
6. திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா? - கருணா மனோகரன்
7. ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - கோவை ஞானி
8. சாதியும் தமிழ்த் தேசியமும் - பெ.மணியரசன்
9. தமிழ்த் தேசியம் எனும் அடையாள அரசியல் - தொகுப்பு கானகன்
10. ‘ஓ’ பக்கங்கள் - ஞாநி
தத்துவார்த்த விமர்சனங்கள்
1. மார்க்சிய மெய்யியல் - இராசேந்திர சோழன்
2. தேசியமும் மார்க்சியமும் - தணிகைச் செல்வன்
3. இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரமும் செயல் தந்திரமும் - மக்கள் யுத்தம் வெளியீடு
4. தலித் பண்பாடு - ராஜ் கெளதமன்
5. சாதியும் வர்க்கமும் - ஏ.ஐ.எல்.ஆர்.சி
6. இந்து இந்தி இந்தியா - எஸ்.வி.ராஜதுரை
7. எந்தப் பாதையில்? - இரா.ஜவஹர்
8. திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல் - தமிழவன்
9. சாதியம் கைகூடாத நீதி - ஸ்டாலின் ராஜாங்கம்
10. இன்றைய காந்தி - ஜெயமோகன்
சிறு வெளியீடுகள்
1. ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
2. மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - கலி.பூங்குன்றன்
3. ஒரு கம்யூனிஸ்ட் துரோகியின் மரண வாக்குமூலம் - புதிய ஜனநாயகம்
4. திராவிட இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா? - க.திருநாவுக்கரசு
5. பிள்ளையார் அரசியல் - ஆ.சிவசுப்பிரமணியம்
6. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? - கீழைக்காற்று
7. முகமூடி கிழிந்த தி.க. ஒப்பாரி வைக்கிறது- இந்து முன்னணி
8. தி.மு.க. இந்துக்களுக்கு விரோதி - இந்து முன்னணி
9. குணா - பாசிசத்தின் தமிழ் வடிவம் - அ.மார்க்ஸ், கோ.கேசவன்
10. பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் - விடுதலை.ராசேந்திரன்
பழைய பிரதிகள்
1. காங்கிரஸ் வினா விடை - மு.வீரராகவாச்சாரி, 1887
2. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் - எம்.சி.ராஜா, 1920
3. தமிழர் யார்? - நாரண துரைக்கண்ணன், 1939
4. திருச்சி ஜெயில் - எல்.எஸ்.கரையாளர், 1941
5. அரசியல் ஞாபகங்கள் - சடகோபன், 1942
6. அரசியல் விமோசனம் - ராஜாஜி, 1943
7. முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி - வி.என்.ரங்கசாமி ஐய்யங்கார், 1943
8. பாகிஸ்தான் (ஜின்னா - பின்னம்) - வி.மஹாலிங்கய்யர், 1940
9. மத விசாரணை - சுவாமி சிவானந்த சரசுவதி, 1940
10. காந்தியார் சாந்தியடைய - ஏ.வி.பி.ஆசைத்தம்பி, 1949