மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200 ஓவியங்கள்: ராமமூர்த்தி

சுடிதார்  இளைஞிகளே..!

அனுபவங்கள் பேசுகின்றன!

தற்காலத்தில் டூவீலரில் செல்லும் ஜாம்பவான்களும், டீன்-ஏஜ் இளைஞிகளுமே தெருக்களை அதிகம் ஆக்கிரமிக்கிறார்கள். இவர்களில் பலர் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததுடன் கவனக்குறைவாக வண்டியை ஓட்டிச்செல்கிறார்கள். நான் ஒரு கடைத் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, இளம்பெண்கள் 2 பேர் தங்களது துப்பட்டாவை காற்றில் பறக்கவிட்டபடி அவர்களும் பறந்து சென்று கொண்டிருந்தார்கள். அவ்வளவு வேகம்..! அப்போது எதிரே வந்த ஒரு ஆட்டோவில் அந்த பெண்களில் ஒருவரது துப்பட்டா சிக்கிக்கொண்டது. சுமார் 10 அடி தூரம் ஆட்டோ சென்றதும் அங்கே கூடியிருந்தவர்கள் சத்தம்போட... ஆட்டோ நின்றது. நல்லவேளை அந்தப் பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. விபரீதம் ஏதும் நிகழ்ந்திருந்தால் யாரைக் குறை சொல்வது?
ஆகவே, டூவீலரில் செல்லும் இளம்பெண்கள் துப்பட்டா, சேலையை காற்றில் பறக்கவிடாமல் பார்த்துக்கொள்வதோடு மிகுந்த கவனத்துடன் வண்டியை ஓட்டிச்செல்ல வேண்டியது அவசியமாகும். யோசிப்பார்களா?

- சோஃபி எபினேசர், திண்டுக்கல் - 1

பெரியோர் நலன் பேணுங்கள்!

அனுபவங்கள் பேசுகின்றன!

என் தோழியின் தாயாருக்கு உடம்பு மிகவும் `வீக்’காக இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அவரை பொறுமையாக பரிசோதித்துப் பார்த்த டாக்டர், என் தோழியிடம் சில கேள்விகளைக் கேட்டபிறகு எதனால் இப்படி ஆனது என்பது தெரியவந்தது. அதாவது, என் தோழி தன் தாயாருக்கு நல்லது செய்கிறேன் என்று நினைத்துக்கொண்டு அவருக்காக தனியாக ஏ.சி. அறை ஒன்றை ஒதுக்கி அதிலேயே அவரை தங்க வைத்திருந்தார். வெளியுலகே தெரியாமல் ஏ.சி-யிலேயே அவரை வைத்திருந்ததால் அவருக்கு சரியாக வியர்வை வெளியேறாமல் இருந்ததோடு, சர்க்கரை நோய் தீவிரமாகிவிட்டது. முக்கியமாக சூரியஒளி அவர்மீது படாததால் முகத்தில் மலர்ச்சி இல்லை. 24 மணி நேரமும் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் விட்டமின்-டி கிடைக்கவில்லை. இதுவே உடம்பு வீக்கானதற்கு காரணம் என்று டாக்டர் கூறினார். அதன்பிறகு டாக்டரின் அறிவுரையின்படி என் தோழி தன் தாயாரை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் காற்றோட்டமான சூழலில் இருக்க வைத்ததோடு, உணவு முறைகளிலும் சில மாற்றங்களை செய்யவே இப்போது நலமுடன் இருக்கிறார்.

- பி.கீதா, அம்மாப்பேட்டை

என் வீட்டு நந்தவனம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

என் தோழி ஒருத்தி நீண்ட நாட்களாக என்னை தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கவே நானும் சென்றிருந்தேன். அவள் வீட்டுக்கு சென்றதும் தோட்டத்தைப் பார்த்து வியந்து நின்றேன். பாரதியார் இருந்திருந்தால், `எங்கெங்கு காணினும் பசுமையடா!’ என்று பாடியிருப்பார். எங்கு பார்த்தாலும் பூஞ்செடிகள், செடிகள், கொடிகள், மரங்கள் என பூத்துக்குலுங்கி கொள்ளை அழகுடன் காணப்பட்டது. தோழியும் என்னை அழைத்துச்சென்று தோட்டம் முழுவதையும் முகமலர்ச்சியுடன் சுற்றிக் காண்பித்தாள். தோட்டக்கலையில் ஆர்வமுள்ள நானும் ரசித்து பார்த்தேன். பிறகு சிற்றுண்டி கொடுத்து உபசரித்தவள், நான் கிளம்பும்போது தாம்பூலத்துடன் சிறு சிறு பாக்கெட்டுகளையும் போட்டு வைத்திருந்தாள். அவை என்னவென்று பார்த்தபோது, பூச்செடிகள் மற்றும் காய்கறிச்செடிகளின் விதைகள் நிறைந்திருந்தன. அவற்றை மனநிறைவோடு பெற்றுக்கொண்டேன். இனிமேல் என் வீட்டுத்தோட்டமும் நந்தவனம்தான்... பூஞ்சோலைதான்!

- சியாமளா ராஜகோபால், சென்னை - 64