மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

  அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

பகிர்வு ஓவியங்கள்: ராமமூர்த்தி , ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.200

  அனுபவங்கள் பேசுகின்றன!

வீண் ஜம்பம் வேண்டாம்!

மீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அங்குள்ள மாலில் என்னை ஈர்த்த கையடக்க ஸ்டூலை எனக்கும் அம்மாவுக்கும் என இரண்டாக வாங்கினேன். பிறகு, அதைக் கஷ்டப்பட்டு சூட்கேஸில் அடைத்து, சூட்கேஸில் இருந்த ஆடைகளை ஹேண்ட் லக்கேஜில் மாற்றிக்கொண்டேன்.
ஊருக்கு வந்ததும் அம்மாவிடம் பெருமையாக, `அம்மா... உனக்காக கடல் கடந்து கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தேன்’ என்று சொன்னதும் அவர்களுக்கு மகிழ்ச்சி. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் என் தம்பி மனைவியைச் சந்தித்தபோது ஸ்டூல் புராணத்தைக் கூற, அவளோ கமுக்கமாக சிரித்துக்கொண்டே வாட்ஸ்அப்பை திறந்து, `இந்த ஸ்டூல்தானே’ என்று காட்டினாள். அதிர்ந்து போய் விசாரித்தபோது, `சென்னையில என் தங்கச்சி 150 ரூபாய்னு வாங்கியிருக்கா' என்று அவள் கூற, எனக்கு தலைசுற்றாத குறை. 150 பெறுமானம்கொண்ட பொருளை 5 டாலர் கொடுத்து அதாவது 250 ரூபாய் கொடுத்து வாங்கியதோடு அதை பத்திரமாகக் கொண்டு வருவதில் எனக்கு ஏற்பட்ட டென்ஷன் எல்லாமே வீண் என தோன்றியது. `இனி வெளிநாடு போனால், சுற்றிப்பார்த்து விட்டு வாங்க. வீண் ஜம்பமா... சாமான் வாங்காதீங்க' என்பது எனக்கு ஒரு படிப்பினை; மற்றவர்களுக்கு எச்சரிக்கை!

- என்.கோமதி, நெல்லை

அட!

திருமணம் ஒன்றுக்கு சென்றிருந்தபோது, வித்தியாசமான ஒரு செயலைக்கண்டு மகிழ்ந்தேன். அதாவது, உணவு உண்ண பந்தியில் அமர்ந்திருப்போருக்கு மணவீட்டார் சார்பில் முதலில் பரிசுப்பொருளை வைத்தபிறகே உணவு பரிமாறினார் கள். இது எல்லோரையும் திருப்திப் படுத்தும் ஒரு செயலாகவே இருந்தது. மேலும், சாப்பிட்டு முடித்ததும் மொய்ப்பணம் எழுதுவோருக்கு மட்டுமே பரிசுப்பொருள் என்றில்லாமல் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுப்பொருள் கிடைத்தது. ஏழை, பணக்காரன் என்றோ, மொய் எழுதியவருக்குத்தான் பரிசுப்பொருள் என்ற அங்கலாய்ப்பு களோ வராது. மணமக்களை எல்லோரும் மனநிறைவோடு வாழ்த்த வேண்டும் என்பதே மண விழாவின் நோக்கம். அதை மிக நேர்த்தியாக நிறைவேற்றிவிட்டார்கள். இதே முறையை எல்லோரும் பின்பற்ற லாமே!.

  அனுபவங்கள் பேசுகின்றன!

- இந்திரா மோகன், நாகர்கோவில்

தினசரி உபயோகத்துக்கு...

கும்பகோணம் சென்றிருந்தபோது ரயிலுக்காக காலை 11 மணி அளவில் ரயில் நிலையத் தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் ரயில் வரவே, வேகமாக ஓடிச்சென்று ஏறினோம். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நிற்கும் என்பதால் ஏறுவதற்கு ஒரே பரபரப்பு. அப்போது அவசரமாக ஏறிய ஒரு பெண்ணின் செருப்பு நழுவி தண்டவாளம் அருகே விழுந்துவிட்டது. இன்னொரு செருப்பு காலில் இருக்கிறது. ரயிலை நிறுத்தி னால் மட்டுமே செருப்பை எடுக்கமுடியும். அந்தப் பெண்ணுக்குர்மசங்கட மான ஒரு நிலை. ஏனென்றால், அந்த செருப்பு விலை உயர்ந்ததாம். ஒற்றை செருப்போடு பயணம் செய்தார் அவர். பொதுவாக, வெளியிடங் களுக்கு செல்லும்போது நல்ல பிடிமானமுள்ள செருப்புகளை அணிவது நல்லது. காஸ்ட்லி செருப்புகளை சில முக்கிய உள்ளூர் நிகழ்வுகளுக்கு மட்டுமே அணிவதை வழக்கமாகக் கொள்ளலாமே. இதன்மூலம் தேவையில்லாத வருத்தங்கள் வராமலிருப்பதோடு பொருட்கள் வீணாவதையும் தவிர்க்கலாமே!

  அனுபவங்கள் பேசுகின்றன!

- எஸ்.வெண்மதி, சென்னை - 4