மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...படம்: வீ.சதீஷ்குமார், வீ.சக்தி அருணகிரி, ரா.ராம்குமார், உ.கிரண்குமார்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ந.ஜயபாஸ்கரன்

“பாத்திரங்களை அடுக்கி வரிசைபோடுவதுபோல் வார்த்தைகளை அடுக்கி வரிசைபோடுவதையே நான் கவிதையாகச் செய்கிறேன். ஆசையின் அமிலமும் காரமும் தடவிச் செரிக்கின்ற பாத்திரங்களை, வர்ணமற்ற துணியில் சதா துடைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆதியில் இருந்து எனக்குப் பிடித்த வண்ணமாக இருப்பது உலோக மஞ்சள்...”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்



கவிஞர் ந.ஜயபாஸ்கரன், மதுரை வெங்கலக் கடைத்தெருவில் பாத்திரக்கடை நடத்துகிறார். `அர்த்தநாரி அவன் அவள்’ என்ற  இவரது தொகுப்பு முக்கியமான ஒன்று. அண்மையில் ‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்’  என்ற  கவிதை நூல் வெளியாகியுள்ளது. “கவிதை பற்றி எந்தத் திட்டமும் வைத்துக்கொள்வது இல்லை. அதற்காக நேரம் ஒதுக்கிச் சிந்திப்பதும் இல்லை. பேரேடுகளில் பற்று-வரவு எழுதும்போது திடீரென ஒரு கவிதை தோன்றும். ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்வேன். பொதுவாக, வியாபாரிக்கு சொல்லில் கவனம் இருக்க வேண்டும். கவிதைக்கும் சொல்தான் முக்கியம். நான் வியாபாரியாக இருப்பது கவிதை எழுத வசதியாக இருக்கிறது.”

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கலை இலக்கியா

“வாழ்வின் மீதான நம்பிக்கைதான் என் எழுத்தின் அடித்தளம். என்னைக் கடந்துசெல்லும் காலத்தை நான் பதிவுசெய்கிறேன். அது வெவ்வேறு மொழிக்கட்டுகளில் வாய்க்கிறது. வரும் காலத்தில் படிமங்களாகவும் வரலாறுகளாகவும் மிஞ்சியிருக்கப் போவது என் எழுத்துகள்தான் என்ற உந்துதலே அன்றாடம் என்னை இயங்கச் செய்கிறது...”

கலை இலக்கியா, தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர். தேனியில் ஒரு தனியார் நூற்பாலையில் அலுவலக உதவியாளராக வேலை செய்கிறார். `இமைக்குள் நழுவியவள்’, `அகமும் புறமும்’, `பிரம்ம நிறைவு’, `என் அந்தப்புரத்துக்கு ஒரு கடவுளைக் கேட்டேன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், `பாரதி ஆத்திச்சூடி கதைகள்’ என்ற சிறுவர்களுக்கான நூல், `ஆயிரம் பேர் தாதி உண்டு’ என்ற தேனி மாவட்ட ஒப்பாரிப் பாடல் தொகுப்பு, திருக்குறள் காமத்துப்பாலை அடிப்படையாக வைத்து, `காமக் கடல் நீந்தி’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஆகியவை கலை இலக்கியாவின் படைப்புகள். சிற்றிதழ் வெளியிலும், இலக்கிய அமைப்புகளிலும் தீவிரமாக இயங்கும் இவரது இயற்பெயர் இந்திரா.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

என்.டி.ராஜ்குமார்

“மனித உள சக்தியுடன் தொடர்புடைய அமானுஷ்யமான மாந்திரீகங்களோடு மிகவும் நெருக்கமானது எனது வாழ்க்கை. என் தாத்தா வழி, அப்பா வழி பிறப்பில் இருந்து மாந்திரீகம் என்னோடு கலந்திருக்கிறது. அதனால் என் கவிதைகளில் மந்திரமொழி நுரைத்துப் பொங்கு

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ம்...”

என்.டி.ராஜ்குமார், நாகர்கோவில் சிதம்பரம் நகரில் சிலம்பக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருக்கிறார். `தெறி’, `ஒடக்கு’, `ரத்த சந்தனப் பாவை’, `காட்டாளன்’, `கல்விளக்குகள்’, `பதநீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’, `சொட்டுச்சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப்பூக்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ஏ.அய்யப்பன், பவித்ரன் தீக்குனி, பொய்கையில் அப்பச்சன், பினு பள்ளிப்பாடு போன்ற கேரள இலக்கிய ஆளுமைகளின் பல படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். `அடவு’, `திணை’ போன்ற நாட்டுப்புறப் பாடல் இசைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. தற்போது மலைவாழ் பழங்குடிகளின் துயரத்தைக் களமாகவைத்து நாவல் ஒன்றை எழுதிவருகிறார். “தாத்தா, அப்பா காலங்களில் உள்ள ஓலைச்சுவடிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை எல்லாம் இப்போது வாசித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். வர்ம வைத்தியமும் செய்கிறேன். சிலம்பத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கே உரித்தான செடி விளையாட்டையும் இப்போது இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறேன்” என்கிறார் என்.டி.ராஜ்குமார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ச.விஜயலட்சுமி

“காலங்காலமாக உற்பத்தியில், பொருளாதாரத்தில் விலக்கிவைக்கப்பட்ட பெண்களின் வாழ்வையும் வலிகளையும் பேசுவதே என் எழுத்துகள். பெண்களின் பார்வை மீதான மொழிதலே என் எழுத்தின் இயங்குதளம்...”

ச.விஜயலட்சுமி, திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியையாக வேலை செய்கிறார்.  `பெருவெளிப் பெண்’, `எல்லா மாலைகளிலும் எரியும் ஒரு குடிசை’, `என் வனதேவதை’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளும், `தமிழ்க் கவிதைகளில் பெண் உரிமை’, `பெண்ணெழுத்து - களமும் அரசியலும்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும், ஆப்கன் தேசத்துப் பெண்களின் வாய்மொழிப்பாடலும் கவிதைகளும் அடங்கிய `லண்டாய்’ என்ற மொழிபெயர்ப்பும் விஜயலட்சுமியின் படைப்புகள். இலக்கியத்தில் பெண்களின் இயங்கு வெளிகளுக்கான வரம்புகளை உடைத்து, பல தளங்களில் செயல்படும் விஜயலட்சுமி, ஒரு சிறுகதைத் தொகுப்பையும், இலக்கிய விமர்சன நூல் ஒன்றையும் விரைவில் வெளியிட இருக்கிறார்.