
10 செகண்ட் கதைகள்!

சந்தேகம்

``உனக்கு எப்போ கல்யாணம்?'' எனக் கேட்டான் காதலன், காதலியிடம்!
- கிருஷ்ணகுமார் தர்மலிங்கம்
பதற்றம்

இன்டர்வியூ நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது, முதன்முதலாக இன்டர்வியூ செய்யவந்த புது ஆபீஸருக்கு!
- அ.ரியாஸ்
மரியாதை

ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் ஒரு நிமிடம் எழுந்து நின்றோம். பிரதியாக அவர் ஒரு மணி நேரம் நின்றார்!
- எஸ். சுந்தரராமன்
ஹெல்த்

``நோ... நோ... ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை. நீங்க ஒரு தோசை மாவு பாக்கெட்டும் இட்லிப் பொடி பாக்கெட்டும் வாங்கிட்டு வாங்க. வீட்லயே நல்லா சாப்பிடலாம்’’ என்றாள் நித்யா!
-அ.ரியாஸ்
ஆசை

ஹீரோயினோடு ஒரே ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார், வருமான வரி சோதனை நடத்தவந்த அதிகாரி!
- பெ.பாண்டியன்
செயற்கை

`இயற்கை விவசாயத்தில் விளைந்தவை’ - காய்கறி, பழங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது!
- எம்.விக்னேஷ்
அடையாளம்

``என்னை அடையாளம் தெரியலையா? நான் உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் சார்’’ என்றார், திருமணத்துக்கு வந்தவர்!
- பெ.பாண்டியன்
சந்தோஷம்

``கண்ணாடியில் பார்க்கும்போதுதான் முகம் டல்லா தெரியுது. செல்ஃபியில் பார்த்தா, எப்பவுமே சந்தோஷமாத்தான் தெரியுது’’ என்றாள் மாதவி, தன் அப்பாவிடம்!
- கே.சதீஷ்
ஞாபகம்

மூக்கைப் பொத்திக்கொண்டனர் பயணிகள் அனைவரும், ஆற்றைக் கடந்தபோது!
- பெ.பாண்டியன்
தொடக்க விழா பூஜை

பேய் படத்துக்கு பூஜை போடப் போனார் கோயில் பூசாரி!
- கோ.பகவான்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!