கலாய்
Published:Updated:

சிட்டி இல்லை... சுட்டி ரோபோ!

சிட்டி இல்லை... சுட்டி ரோபோ!
பிரீமியம் ஸ்டோரி
News
சிட்டி இல்லை... சுட்டி ரோபோ!

சிட்டி இல்லை... சுட்டி ரோபோ!

சிட்டி இல்லை... சுட்டி ரோபோ!

சென்னையைச் சேர்ந்தவர் மஹ்மூத் அக்ரம். எந்திரன் சிட்டி ரோபோவுக்கு உள்ள திறமை அப்படியே இவர்கிட்டேயும் இருக்கு. புரியலையா..? அக்ரமுக்கு 400 உலக மொழிகள் அத்துப்படியாம். இத்தனைக்கும் இவருக்கு வயசு 10 தான்!

``என் சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கத்துல அபிராமம். இப்போ சென்னைல இருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே புதுசு புதுசா லாங்குவேஜ் கத்துகிறதுல ஆர்வம். சென்னை ராதாகிருஷ்ணன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 6 ஆவது வரை படிச்சேன். எனக்கு மொழிகளை மட்டும் தனியா படிக்கணும்னு ஆசை. அதனால  இந்த ரெகுலர் ஸ்கூல் நமக்கு செட்டாகாதுனு போன வருஷமே ஸ்கூலுக்குப் போறதை நிறுத்திட்டேன். மொழிகளை மட்டும் கத்துக்கொடுக்கிற ஸ்கூல் எங்கே இருக்குன்னு தேடினப்போ இஸ்ரேல் நாட்டுல `இஸ்ரேல் லாங்குவேஜ் ஸ்கூல்’ அப்படின்னு ஒண்ணு இருக்குறது தெரிய வந்துச்சு. உடனே ஆன்லைன் ஸ்டூடன்ட்டா அதுல சேர்ந்துட்டேன். உலக மொழிகளை மட்டுமே இங்கே ஸ்பெஷலா சொல்லித்தராங்க. அடுத்த வருஷம் நேரடியா இஸ்ரேலுக்கே போய் படிப்பைத் தொடர வீட்ல ஏற்பாடு பண்றாங்க அங்கிள்!’’ என்றவரிடம், ``மொழிகள் குறித்த இந்த ஆர்வம் எப்படி வந்தது தம்பி’’ என்று கேட்டேன்.

சிட்டி இல்லை... சுட்டி ரோபோ!

``என் அப்பா அப்துல் ஹமீது  சவுதி, துபாய், குவைத்துனு பல நாடுகள்ல வேலை பார்த்தவர். அதனால் அவருக்கு  நிறைய மொழிகள் தெரியும். எனக்கு 4 வயசு இருக்கும்போது முதல் முறையா அரபி மொழியைக் கத்துக்கொடுத்தார். நான் கத்துக்கிட்ட வேகத்தையும் என்னுடைய ஆர்வத்தையும் பார்த்தவர் அடுத்து தமிழ் பிராமி... அதாவது திருவள்ளுவர் கையினால் எழுதிய எழுத்து முறை, பல்லவர்களின் கிரந்த எழுத்துகள், ஏசுநாதரின் தாய்மொழியான அராமிக், எகிப்தியர்கள் பயன்படுத்திய சித்திர எழுத்துகள்னு விதவிதமா கத்துக்கொடுக்க ஆரம்பிச்சுட்டார். அப்புறம் நானே சொந்தமா நிறைய மொழிகளைக் கத்துக்கிட்டேன். என்னோட டேலன்ட்டைப் பார்த்து என்னை சொந்தக்காரங்க எல்லோரும் சுட்டி ரோபோனு கூப்பிடுறாங்க அங்கிள்!’’ என்கிற அக்ரமுக்குத் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபிக், அச்செனிஸ், ஆப்ரிக்கன்ஸ், அல்பேனியன், அமசைக், அம்ஹரிக், ஆர்மீனியன், அஸென்தெ, அஸ்ஸாமிஸ், அஸெர்பைசானி, பஹஸ பூஹிஸ், பஹஸ மதுர, பாலினிஸ், பலூச்சி, பவ்லே, பாஷ்கிர், பாஸ்கியூ, பஸ்ஸா, பத்தகீஸ், பெலருஷ்யன், பெம்ப, பெங்காலி, பெத், பிக்கலோனா, பொஸ்னின், பிராகுய், பல்கேரியன், பர்மீஸ், கேஸ்டீலியன், கட்டலன், சிபூவானோ, சென்ட்ரல் குர்தீஷ், சத்தீஷ்கரி, செஷன், செரோக்கீ, சிச்சோவா, சைனீஷ் ஸிம்லிபைடு, சைனீஷ் ட்ரெடிஷனல், சியாவோ... என்ன மூச்சு வாங்குதா? இது சும்மா சாம்பிளுக்கு! இப்படி 400 மொழிகளில் எழுதவும் படிக்கவும், 40 மொழிகளில் சரளமாகப் பேசவும் தெரியுமாம்! மொழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்லூரிகளுக்குச்  சென்று இவர் வகுப்பும் எடுக்கிறார். பஞ்சாப்பில் `Unique World Record’ என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பல மொழிகளில் விரைவாக தட்டச்சு செய்து `World Youngest Multilingual Typist’ என்ற பட்டத்தையும் கடந்த வருடம் வாங்கியிருக்கிறார். அடுத்து கின்னஸ் சாதனை முயற்சியிலும் இருக்கிறார்.

ஆல் த பெஸ்ட் அக்ரம்!

- ஜுல்ஃபி