
டபுள் வெல்கம்!

ஒரு குழந்தை ஒருமுறைதான் பிறக்கும்கிறதுலாம் அந்தக்காலம், ரெண்டாவது தடவையும் பிறக்கும். என்ன பாஸ் அதிர்ச்சியா இருக்கா? மேலே படிங்க....

இந்தச் சம்பவம் நடந்துருப்பது அமெரிக்காவில் ஆம், மார்கரேட் போயிமர் என்கிற பெண்மணி 16 வார கர்ப்பத்துடன் மருத்துவமனைக்கு சோதனைக்காகச் சென்றிருக்கிறார். குழந்தைக்கு ஏதோ கட்டி வளர்வதாகவும் உயிருக்கே ஆபத்தானது என்றும் தெரிவிக்க. 23வது வாரத்தில் குழந்தையை அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுத்து 5மணி நேரத்துக்கு மேலாக போராடி அறுவை சிகிச்சை செய்து அந்தக் கட்டியை நீக்கி இருக்கின்றனர். கட்டியை நீக்கியதும் முழுவளர்ச்சி அடைந்திடாத அந்தக்குழந்தையை மறுபடி தாயின் வயிற்றுக்குள்ளேயே வைத்து கர்ப்பப் பை தைக்கப்பட்டு பின் அனுப்பிவைத்திருக்கின்றனர்

அந்த அறுவைசிகிச்சை முடிந்து அடுத்த 12 வாரங்களுக்குப்பின் முற்றிலும் நல்ல ஆரோக்கியத்துடன் அறுவைசிகிச்சை மூலம் இரண்டாவது முறையாக அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. இருமுறை பிறந்த உலகின் அதிர்ஷ்டசாலிக் குழந்தையான அதற்கு லின்னி எனப் பெயர் சூட்டியிருக் கிறார்களாம்!
யூ ஆர் வெல்கம்!
- ஜெ.வி.பிரவீன்குமார்