கலாய்
Published:Updated:

துப்பாக்கி பாட்டி!

துப்பாக்கி பாட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
துப்பாக்கி பாட்டி!

துப்பாக்கி பாட்டி!

துப்பாக்கி பாட்டி!

`பாட்டிய வெத்தல பாக்கு நசுக்கிப் பாத்திருப்ப. சமையல் செஞ்சு பாத்திருப்ப... ஏன் தடிய எடுத்துட்டு அடிக்க ஓடி வர்றதக்கூட பாத்திருப்ப. துப்பாக்கி எடுத்து சுடுறதை பார்த்திருக்கியா?' என்று பஞ்ச் பேசலாம் போல் இருக்கிறது சந்திரா தாமஸ் பாட்டியைப் பார்க்கும்போது! உத்திரப்பிரேதசம் மாநிலத்தில் வசிக்கும் இந்தப்பாட்டி தினமும் காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையிலும் துப்பாக்கி சுடுவதில் பிஸி! 78 வயது ஆகும் பாட்டிக்கு ஆறு பசங்களும் 15 பேரக் குழந்தைங்களும் இருக்கிறார்கள். குறி பார்த்து சுடுவதில் கில்லியான இந்தப் பாட்டி துப்பாக்கியைப் பிடிக்க ஆரம்பித்ததே 65 வயதில் தானாம்!

துப்பாக்கி பாட்டி!

பேத்திக்கு 11 வயதாக இருக்கும்போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்குத் துணையாக பாட்டியும் போயிருக்கிறார். பேத்தி பயந்து நடுங்குவதைப் பார்த்து கடுப்பான பாட்டி ஒரு கட்டத்தில் நேராக ரேஞ்சுக்குள் போய் துப்பாக்கியைக் கையில் எடுத்து `டுமீல் டுமீல்' என இலக்கைக் குறிவைத்து சுட்டிருக்கிறார். ஷார்ப்பான அந்த ஷாட்ஸைப் பார்த்த பயிற்சியாளர் ஆச்சர்யமாகி பேத்திக்குப் பதில் பாட்டிக்குக் கோச்சிங் கொடுக்க 78 வயசிலும் உ.பி அறிந்த பிரபலமாகி விட்டார் பாட்டி!  40 வயசானாலே கை நடுங்கும்போது இந்தப் பாட்டி எப்டி இப்டி? ``ராத்திரில எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறம் ஒரு கைல ஜக்கில் தண்ணிய வெச்சிட்டு ஒரு மணி நேரம் நின்னு பிராக்டீஸ் செய்றது பிடிக்கும். ஒரு சொட்டு தண்ணிகூட சிந்தாது'' என்று சொல்லும் பாட்டிதான் அந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமகளாம்! இவங்களைப் பார்த்து `இன்ஸ்பையர்' ஆன இந்தக் குடும்பத்தோட இளைய மருமகளும் துப்பாக்கி சுடுவதில் ஆர்வமாக ஈடுபட ஒரே துப்பாக்கி சத்தம்தான் போங்க..! தாத்தாக்களோட வீரத்தைச் சொல்ற மாதிரி யாராச்சும் பாட்டிங்களோட வீரத்தைச் சொல்ற படம் எடுத்தா இந்தப் பாட்டி நிச்சயம் ஒரு ரோல் மாடலா இருப்பாங்க..!

- ஃபீனிக்ஸ் ராஜு