கலாய்
Published:Updated:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
பிரீமியம் ஸ்டோரி
News
அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘தெரியாமப் போட்டுட்டாங்களோ?’ மொமன்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தீபாவளிக்கு ஜெயா டி.வி.யில் ‘கத்தி’ படம். க்ளைமாக்ஸில் விஜய் தன்னூத்து கிராம முதியவர்களைக் கூட்டிட்டுப் போய், சென்னையில் தண்ணி வரக்கூடிய இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்துறார். அப்படிப் போராட்டம் நடத்தக்கூடிய இடங்களில் ஒன்று செம்பரம்பாக்கம். தண்ணி வரக்கூடாதுனு அன்னைக்கு செம்பரம்பாக்கம் பைப்பை அடைச்சுப் போராட்டம் பண்ணினவர் விஜய். செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணி... சரி, விடுங்க!

தட் ‘அசிலி பிசிலி:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

சுழலி’ மொமன்ட்: தனுஷ் நடிச்ச ‘கொடி’ படத்தில் வில்லன் அரசியல்வாதி யார் தெரியுமா? விஜயோட அப்பா எஸ்.ஏ.சி.ண்ணா... மக்கள் இயக்கம் ஞாபகம் வருதுங்ணா. ஆமா, படத்தில் தனுஷைத் தவிர எல்லாருக்குமே ‘அரசியல்ங்கிறது சம்பாதிக்கத்தான்’னு தெரியுதே, ஆனா, அதுகூடத் தெரியாத அப்பாவியா இருக்காரே தனுஷ். அவ்வ்வ்வ்!

தட் ‘நல்லா சொல்லுங்கய்யாடீட்டெய்லு’ மொமன்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

ரப்போற சட்டமன்ற இடைத்தேர்தலைத் தமிழ் மாநில காங்கிரஸ் புறக்கணிக்கப்போகுதாம். உடனே ‘ஆவ்வ்வ்’னு அசுவாரஸ்யமாக் கொட்டாவி விடக்கூடாது. ‘‘அப்போ உங்க கட்சித் தொண்டர்கள் என்ன பண்ணுவாங்க?’’னு நிருபர்கள் கேட்டதுக்கு ஜி.கே.வாசன் பதில் இது... ``வழக்கம்போல் தொண்டர்கள் மனச்சாட்சிப்படி ஓட்டுப் போடுவாங்க’’னு சொல்லியிருக்கார். அதென்ன பாஸ் கட்சி தேர்தலைப் புறக்கணிச்சா, தொண்டர்களும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டியதுதானே? அதென்ன புறக்கணிக்கிறவங்க எல்லாம் ‘மனச்சாட்சிப்படி தொண்டர்கள் ஓட்டு போடுவாங்க’னு சொல்றீங்களே, அடுத்த கட்சியை ஆதரிச்சு ஓட்டு போடுறதுதான் மனச்சாட்சியா பாஸ்?

தட் ‘பேய்க்கே பேய் பிடிக்கும்’ மொமன்ட்:

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

‘காஷ்மோரா’ படத்தில் 700 வருஷத்துக்கு முன்னால செத்துப்போன ராஜ்நாயக் பேய் (கார்த்தி), ஃபிராடு மந்திரவாதி காஷ்மோரா (இது இன்னொரு கார்த்தி) குடும்பத்தைத் தூக்கிட்டு வந்துடுது. காரணம், ‘பேய்களின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றி மோட்சத்துக்கு அனுப்புறதா’ கார்த்தி பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருந்தாராமாம் (மாசு வாடை வருதா பாஸ்?) பேய் பேப்பர் படிச்சதைக்கூட நம்பலாம். ஆனா ‘எங்க குடும்பத்தில் அஞ்சுபேரும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவங்க’னு டி.வி பேட்டியில் சொன்னதைக் கேட்டு, குடும்பத்தோடு நரபலி கொடுக்கத் தூக்கிட்டு வந்துருதாம். ஏம்பா, பேய் பேப்பர் படிச்சதை நம்புனோம் கிறதுக்காக, அது டி.வி. பார்க்குது, அதுவும் 700 வருஷமா அடைஞ்சு கிடக்குற பேய் பங்களாவில் டி.வி பார்க்குதுங்கி றதையுமா நாங்க நம்பணும்?