கலாய்
Published:Updated:

‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘ட்ரெண்ட்’பெட்டி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

கலக்கல் இந்தியா!

‘ட்ரெண்ட்’பெட்டி!

விளையாட்டுத் துறையில் இந்தியாவிற்கு இது ஏறுகாலம். கபடி உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் காரணமாக #INDvNZ #menshockey #asianchampionstrophy2016 #indianhockeyteam #asianhockeychampionstrophy போன்ற டேக்குகள் ட்ரெண்டைக் கலக்கின. செம!

ரியல் ஹீரோ!

‘ட்ரெண்ட்’பெட்டி!

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற லியனார்டோ டிகாப்ரியோ, நடிகரைத்தாண்டி தனது இயற்கை சார்ந்த பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காகப் பெயர்பெற்றவர். ஐ.நா.வின் அமைதிக்கான தூதராகவும் தற்போது உள்ளார். புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் தயாரித்து நடித்துள்ள `Before the Flood' ஆவணப்படத்தை கடந்த வாரம் வெளியிட்டார். உலக அளவில் #BeforeTheFlood ட்ரெண்ட் ஆனதோடு, ஹாலோவின் மாதத்தில் அதிகம் பயமூட்டுவதாக இந்த ஆவணப்படம் தான் இருக்கிறது என பாசிட்டிவ் வரவேற்புகள் கொட்டுகின்றன. வெல்டன் ஹீரோ!

ஒபாமா முதல்...

‘ட்ரெண்ட்’பெட்டி!

ந்தியா முழுவதும் (சரி சரி... கேரளா தவிர்த்து) கடந்த வாரம் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஓவல் அலுவலகத்தில் விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினால்... இன்னொரு பக்கம் கிட்டத்தட்ட பாதி இந்தியராக மாறிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தனது பிறந்தநாளோடு சேர்த்து ட்விட்டரில் தீபாவளி சரவெடி கொளுத்தினார். #happydeepawali டேக்கில் லட்சக்கணக்கான ட்வீட்கள் குவிந்ததால் உலக ட்ரெண்ட்டில் இடம்பிடித்து சாதனை பிடித்தது. ரைட்டு!

பேரழகி!

‘ட்ரெண்ட்’பெட்டி!

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். கரண் ஜோஹர் இயக்கத்தில், ரன்பீர் கபீருடன் இணைந்து இவர் நடித்துள்ள ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் இவரது நடிப்பைத் திரைத்துறையினர் பலரும் பாராட்டியுள்ள நிலையில், தனது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். பல்வேறு கருத்துக் கணிப்புகளில் ‘உலக அழகிகளிலேயே மிக அழகானவர்’, ‘உலகின் மிக அழகான பெண்’ போன்ற பட்டங்களை வென்ற இந்த அழகி தனது 43 வயதை நிறைவு செய்திருக்கிறார். வயசே ஆகாத அழகி!

சாதனை படைத்த டீசர்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

ரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹிட் அடித்தது போல, டீசரையும் ஹிட் அடித்து ரசிகர்கள் சாதனை படைத்துள்ளனர். டீசர் வெளியான 76 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளைக் கடந்தது. இது போதாதென்று #bairavaateaserhits5mviews டேக்கையும் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர் ரசிகர்கள். இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக உயர வாய்ப்புள்ளது. வாழ்த்துகள்!

மெகா ஸ்டார்!

‘ட்ரெண்ட்’பெட்டி!

டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படமான `கைதி நம்பர் 150' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. தமிழில் வெளியான ‘கத்தி’ திரைப்படத்தின் ரீமேக்தான் என்றாலும், சிரஞ்சீவியின் 150-வது திரைப்படம் என்பதாலும், பத்து வருடங்கள் கழித்து அவர் மீண்டும் நடித்துள்ளதாலும் மெகா பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது. இதைத்தொடர்ந்து #KhaidiNo150, #MegaStarChiranjeevi #BossIsBack #khaidino150firstlook போன்ற டேக்குகள் மணவாடுகளின் தயவால் ட்ரெண்ட் ஆனது. பாஸ் இஸ் பேக்!

- ட்ரெண்டிங் பாண்டி