
உச்சியிலே...

`மாடல் போட்டோ ஷூட்டை ஸ்டூடியோவில் பார்த்திருப்பீங்க... ஸ்விம்மிங் பூலில் பார்த்திருப்பீங்க... ஏன்... காட்டுக்குள்ளே கூடப் பார்த்திருப்பீங்க. மலை உச்சியில் பார்த்திருக்கீங்களா?


தன்னந்தனியா முகட்டில் நின்னு சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுத்துப் பார்த்திருக்கீங்களா?' எனச் சிங்கம் போலக் கர்ஜிக்கும் கிறிஸ்டினா ஃபோல்சிக் அமெரிக்காவைச் சேர்ந்தவர். சிறுவயது முதலே திகில் கிளப்பும் சாகசங்களில் விருப்பம் கொண்ட இவர் சமீபத்தில்தான் பார்த்தாலே ஜெர்க் ஆகும் ஈக்லெட் மலையின் உச்சியில் ஸ்டைலாக நின்று மாடல் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். `ஃஉச்சியில் நிற்கும்போது அதிகமாகக் காற்று வீசியதால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால், காற்று வீசியதால்தான் இந்த போட்டோ சூப்பராக வந்திருக்கிறது' எனக் கூலாகச் சொல்லிவிட்டு அடுத்த த்ரில் போட்டோஷூட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
பச்ச மலைப் பூவு... நீ உச்சி மலைத் தேனு!
- விக்கி