கலாய்
Published:Updated:

டாக் ஸ்பா!

டாக் ஸ்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக் ஸ்பா!

டாக் ஸ்பா!

டாக் ஸ்பா!

“ஒவ்வொரு வருஷம் புது டைரி வாங்கும்போதும் சொந்தமா ஒரு தொழில் தொடங்கணும்னு எழுதி வெச்சுப்பேன். இருந்தாலும் நாம நினைக்கிற எதுவும் உடனே நடந்துறாது இல்லையா. ஐ.டில வேலை,  பேங்க்ல வேலைன்னு ஓடிட்டு இருந்தேன். இந்த நாய்ப்பொழப்புக்கு நாயை வெச்சே பொழப்பு நடத்திரலாம்னு  வந்த ஐடியா தான், நாய்களுக்கான ஸ்பா!''-நக்கலும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் சென்னையில் `டாக் ஸ்பா' வைத்திருக்கும் சங்கீதா.

``எப்படி நாய்க்குட்டிகள் மேல கவனம் வந்துச்சு?''


``சின்ன வயசுல இருந்தே நாய் வளர்க்கணும் ஆசை இருந்துச்சு. வீட்டுல கேட்டேன். `நீ முதல் ரேங்க் வாங்குனா வாங்கித் தர்றேன்'னு சொன்னாங்க. நமக்கு பாஸ் ஆகுறதே பெருசு. இதுல எங்க முதல் ரேங்க் வாங்குறது. ஸோ அது நடக்கவே இல்லை. அப்ப முடிவு பண்ணேன். நாம வேலைக்குப் போனா முதல் சம்பளத்துல நாய் வாங்கணும்! அப்போ வோடஃபோன் விளம்பரம் பார்த்துதான் வோடஃபோன் நாய் வாங்குனேன். என் லைஃபே சேஞ்ச் ஆன மாதி ஃபீல்.  கொஞ்ச நாளுக்குப் பிறகு இன்னொரு நாய்க்குட்டி ஒண்ணு தத்தெடுத்தேன். அப்போதான் நாய் வளர்க்குற ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேரோட நட்பு கிடைச்சது. அதுதான் இப்போ ஸ்பா அளவுக்கு வந்து நிக்குது. அப்புறம் இதுக்குனு தனியா கோர்ஸ் பெங்களூர்ல இருக்குனு கேள்விப்பட்டு ஒரு மாச கோர்ஸ் படிச்சேன். இந்த கோர்ஸுக்கு ஃபீஸ் மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாய்!''

டாக் ஸ்பா!

``நாய்களுக்கான ஸ்பால என்னெல்லாம் பண்ணுவீங்க?''

``நம்மள மாதிரிதான்.... நகம் வெட்டி விடுவோம். முடி வெட்டுறது, பல்லு வெளக்கி விடுறது, குளிப்பாட்டுறதுன்னு நமக்கு நாம எப்படி பண்ணுவோமோ அதையேத் தான் நாய்க்குட்டிகளுக்குப் பண்றோம். சின்ன வயசுல நம்ம வீட்டுல சொல்லுவாங்கள்ல. `உன்னைய குளிக்க வைக்கிறதுக்குள்ள நாலு நாய்க்குட்டிய குளிக்க வச்சுரலாம்'னு அது உண்மைதான் ப்ரோ.''

``எவ்வளவு ஃபீஸ் வாங்குறீங்க?''

``ஒரு நாய்க்குட்டிக்கு ஆயிரத்தி ஐநூறுல இருந்து இரண்டாயிரம் வரைக்கும் வாங்குறோம். ஒரு நாய்க்குட்டிக்கு  அதிகபட்சம் ரெண்டு மணி நேரம் ஆகும்.''

``நாய்க்கு இவ்வளவு செலவுங்கிறது ஆடம்பரம் இல்லையா?''

``இல்லை. நாய்கள் வீட்டுல ஒரு ஆளா மாறிடுச்சு. சின்னக்குழந்தைகள் இருக்குற வீட்டுல எல்லோரும் தொட்டுப்பழகுற ஒரு உயிர். சுத்தமா இல்லைன்னா அது யாருக்குமே ஆரோக்கியம் கிடையாது. அதனால இது ஆடம்பரம் கிடையாது, அத்தியாவசியம்.''

``வீட்டுல எப்படி ஆதரவு இருக்கு?''

``எங்க குடும்பத்துக்கே நாய்னா ரொம்பப்  பிடிக்கும். வரப்போற கணவருக்கு இதெல்லாம் புடிக்குமான்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. மாப்ள பார்க்குறப்போகூட நாய்க்குட்டி வளர்க்குறதுல ஆர்வம் உள்ள பையனா இருந்தாமட்டும் போதும்னு சொன்னேன். என்னைப்போலவே என் கணவர் இருப்பார்னு அப்புறம்தான் தெரிஞ்சது. வாழ்க்கை சந்தோஷமா போகுது.''

- ந.புஹாரி ராஜா