கலாய்
Published:Updated:

காதல் பஸ்!

காதல் பஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் பஸ்!

காதல் பஸ்!

காதல் பஸ்!

`இன்னும் நமக்குக் கல்யாணம் ஆகலையே சொக்கா!' என ஆதங்கத்துடன் அலையும் ஆண்கள் மற்றும் பெண்களைக் குறிவைத்து, லண்டனில் ஒரு காதல் பஸ்ஸை அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஏன், எதுக்குனு ஆராய்ச்சி பண்ணாம, விஷயத்துக்குப் போவோம்!

காதல் பஸ்!

திருமணமாகாதவர்கள், தங்கள் ஆபீஸுக்குச் செல்வதற்கு இந்த பஸ்சில் பயணிக்கலாம். அப்படியே பயணநேரத்தில் பிற பெண்கள், ஆண்களோடு பேசி தனக்குப் பிடித்த பெண்ணையோ மாப்பிள்ளையையோ தேர்வு செய்துகொள்ளலாம். அவர்களுடன் உடனடியாகத் திருமண பந்தத்தில் இணைவது அல்லது காதலைத் தொடங்குவது அவரவர் விருப்பம். பஸ்ஸில் ஏறித் தனக்குப் பிடித்த துணையோடு பேசித் தங்கள் நேரத்தைச் செலவழிக்கலாம். பிடிக்கவில்லையெனில் பஸ்ஸில் இருக்கும் வேறொருவருடன் டேட் செய்யத் தொடங்கலாம் என இந்த `டேட் மாஸ்டர் பஸ்'ஸை அறிமுகப்படுத்தியிருக்கும் `மேட்ச்.காம்' என்னும் டேட்டிங் இணையதள நிறுவனம் அறிவித்திருக்கிறது.

காதல் பஸ்!

இங்கிலாந்தில் திருமணமாகாதவர்களில் 55 சதவிகிதம் பேர், `டேட்டிங்குக்கு நேரமில்லை' என்று கூறுகிறார்கள். அதிலும், நாளெல்லாம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் லண்டன்வாசிகள், தங்களின் அன்றாட நெருக்கடிகளுக்கு இடையே டேட்டிங்கை நினைத்துப் பார்க்கவே முடியாது என்கிறார்கள். திருமண வரன் தேடும் ஆண்களும் பெண்களும் நேரடியாக சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யும் ‘டேட்டிங் சர்வீஸை’ இந்த இணையதளம் வழங்கிவருகிறது. ஆனால், காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் லண்டன்வாசிகள், ‘டேட்டிங்கா... அடப் போங்கப்பா... அதுக்கெல்லாம் ஏது நேரம்’ என அலுத்துக்கொள்கிறார்களாம்.

காதல் பஸ்!

நம்ம ஊர்ப்பக்கம்லாம் இந்த பஸ் வராதா பாஸ்...? அதுசரி, பஸ்ஸே வர்றதில்லையாம்!

- விக்கி