கலாய்
Published:Updated:

டெக்மோரா

டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

`ஆம்பள' பட விஷாலையும், டைரக்டர் ஹரியையும் இனிமே யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு ஒரு கார் வந்திருக்கு. `லாஜிக் வேணாமாய்யா, கார் எப்படி வானத்துல பறக்கும்'னு இவங்களைப் பார்த்து கேட்டவங்களுக்கெல்லாம் இந்த கார்தான் பதில். யெஸ்... ஏரோமொபைல் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய அறிமுகம் தான் பறக்கும் கார். `ஸ்லோவாக்கியன் ஸ்டார்ட் அப்' தான் இந்த காரை தயாரிச்சிருக்காங்க.

இந்த கார் தரையிலிருந்து 650 அடி உயரம் வரை மேலெழும்பிப் பறக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் கலனை முழுமையாக நிரப்பினால் 430 மைல் தூரம் வரை பயணிக்கலாம். தரையிலிருந்து 164 அடி உயரத்தில் இருக்கும்போதுகூட தரையிறக்க முடியும். அதேபோல் சமதளத்தரை அனைத்திலும் தரையிறக்க முடியுமாம்.

பக்கவாட்டுக் கதவுகள் இறக்கைகளாக மாறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார் மணிக்கு 124 மைல் வேகத்தில் பறக்கக்கூடியது. இது தரை மற்றும் ஆகாய மார்க்கத்தில் பயணிக்கூடியதாக இருப்பதால் ஓட்டுநர் பைலட் லைசென்ஸ் பெற்று ஓட்ட வேண்டும். விமானப் போக்குவரத்துத்துறையின் அனுமதிக்குக் காத்திருக்கும் இந்தத் தயாரிப்பு 2017-ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவம், போலீஸ் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இது மிகவும் உதவும் என இதன் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். எப்படியோ, ஆடி கார் வைச்சிருந்தாலும் அசால்ட்டா வானத்துல பறக்க டாடா சுமோ வேணும்னு ஸ்டேட்டஸ் போட்டவங்களுக்கெல்லாம் இப்ப எக்ஸ்ட்ரா ஒரு சாய்ஸ் கிடைச்சிருக்கு. மை டியர் தமிழ் சினிமா நோட் பண்ணுங்கப்பா... நம்மளை யாரோ காப்பி அடிக்கிறாங்க... இந்தக் காருக்கு இன்ஸ்பிரேஷன் விஷால்தான்னு கிளப்பி விடுங்க!

- டெக்கி கய்