கலாய்
Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

`அவெஞ்சர்ஸ்', `கேப்டன் அமெரிக்கா', `ஜாக் ரீச்சர் நெவர் கோ பேக்' போன்ற படங்களில் திறமை காட்டிய கோஃபி ஸ்மல்டர்ஸின் ஹாட் பக்கங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

மாடலாக கலைப்பயணத்தைத் தொடங்கியவர். ஒரு கட்டத்தில் அது போரடிக்கவே நடிக்கத் தொடங்கினார். #எங்களுக்கு போரே அடிக்கலையே!

கனடாவில் டச்சு அப்பாவுக்கும், ஆங்கிலேய அம்மாவுக்கும் பிறந்த மத்தாப்பூ. வீட்டில் மூத்தவரான கோஃபியின் பெயரையே இவருக்கும் வைத்தார்கள். #இது கோல்டு கோஃபி!

ஹா[லிவு]ட் டைரி

ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து வெளியான `ஹவ் ஐ மெட் யுவர் மதர்' என்ற சூப்பர்ஹிட் சீரியலில் மேடம்தான் லீட் ரோல். #அந்த ஊரு சித்தி!

2007-ல் கர்ப்பப்பைப் புற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். இனி இயற்கை முறையில் கருத்தரிக்க முடியாது என்ற மருத்துவர்களின் கூற்றுகளைப் பொய்யாக்கி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். #போல்டு அண்டு பியூட்டி!

விளையாட்டுகளில் நிறையவே ஆர்வம். கால்பந்து, டென்னிஸ், நீச்சல் போன்றவற்றில் பொளந்து கட்டுவார்.#ஆல்ரவுண்டர்!

ஹா[லிவு]ட் டைரி

சக நடிகரான டாரன் கில்லம் உடன் ஏழாண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதன்பின் டும்டும்டும். #கொடுத்து வெச்ச கில்லம்!

மேக்ஸிம் இதழ் ஹாட்டான நூறு பெண்கள் பட்டியலில் கோஃபிக்கு ஒன்பதாவது இடம் கொடுத்தது. #ஒன்பதுல குரு!

இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதிலும் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பில் அதீத ஆர்வம். #சூப்பரேய்!

- ஃபாலோயர்