கலாய்
Published:Updated:

சினிமா விடுகதை!

 சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

 சினிமா விடுகதை!

ந்தவார சினிமா விடுகதையில் குரலில் உச்சஸ்தாயிக்குச் சென்று வித்தை காட்டும் பாடகர் சங்கர் மகாதேவனின் பாடல்கள்தான் விடைகள்!

1. பாடியவரே ஆடிய பாட்டு. கேட்பவரைத் தலையாட்டி ரசிக்கவைத்த பாட்டு. இசைப்புயலின் மாஸ்டர் பீஸில் ஒன்று. தனியா இருக்கும்போது கேட்டாலே காதல் பொங்குமே இன்று... அது என்ன பாட்டு?

2. இளமை பொங்கிய படத் தலைப்புக்கு, இளைய தளபதி போட்டாரே செம குத்து டான்ஸ். சிம்ரன் `ஸ்லிம்ரன்'னாக மாறி இடுப்பை வெட்டி இளசுகள் மனசைக் கட்டிய பாட்டு... என்ன பாட்டு?

3.தேசிய விருது தேடி வந்த பாடல். `தல' வாயசைத்துப் பாடிய பாட்டு. ரஹ்மான் - சங்கர் மகாதேவன் காம்பினேஷனின் மற்றுமொரு ஹிட்டு. பாடலைக் `கண்டுகொள்ள' இன்னுமா க்ளூ வேணும்? என்ன பாட்டுன்னு சொல்லப் போறீங்க?

4.குழந்தையைக் கொஞ்சுவதைப் பாடமாக எடுத்த பாட்டு. யுவனுடன் இணைந்து சங்கர் மகாதேவன் செய்த மேஜிக். குழந்தைகளுக்குப் பிடித்ததோ இல்லையா தகப்பன்கள் தலையாட்டி ரசித்தார்கள். சைலன்டா சொல்லுங்க என்ன பாட்டுனு?

5. ரொமான்ஸ் பாட்டு; ஆனா டூயட் இல்லை. இந்தப் பாடலை முணுமுணுக்காத இளசுகளும் இல்லை. காதலனின் ஏக்கத்தையும் காதலின் ஏக்கத்தையும் ரயில் பாதையில் படத்தில் `தல' படிச்சார். வித்யாசாகர் இசை அமைச்சார். வா வான்னு அழைத்த பாட்டு என்ன பாட்டு பாஸ்?

6. சூப்பர் ஸ்டாருக்கு சங்கர் மகாதேவனின் ஓப்பனிங் சாங். வாழ்க்கையை எட்டா பிரிச்சது ஒரு பாட்டுனா இது மூணா பிரிச்ச  பாட்டு. சினிமாவையும் வாழ்க்கையையும் கம்பேர் பண்ணின பாட்டுனா கரைக்டா சொல்லிடுவீங்களே... என்ன பாட்டு?

7. இந்தப் பாட்டுக்கு அநாயசமாக ஹை பிட்ச் செல்லும் இவரின் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமுண்டோ. மேடு பள்ளமெல்லாம் அலட்சியமாகத் தாண்டும் குதிரையின் லாகவத்துடன் இந்தப் பாட்டு முழுவதும் சங்கரின் குரல் மாயாஜாலம் செய்யும். முணுமுணுக்கத் தொடங்கி
வாய்விட்டே பாடும் பாடல்... என்ன பாடல்?

8. பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டடித்த பாட்டில் ரஹ்மானும் வைரமுத்துவும் சொல்லியடித்தார்கள். முதல் பாட்டுனா சரியா சொல்லிடுவீங்கனுதான் கடைசியா கேட்டிருக்கோம். என்ன பாட்டு?

- கே. கணேஷ்குமார்

விடைகள்:
1. ரிதம் - தனியே தன்னந்தனியே...
2. யூத்- ஆல்தோட்ட பூபதி நானடா...
3.  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா...
4. சத்தம் போடாதே- அழகுக் குட்டிச்செல்லம் உன்னை அள்ளிக் கொஞ்சும்போது...
5.  பூவெல்லாம் உன் வாசம் - தாலாட்டும் காற்றே வா...
6. பாபா- டிப்பு டிப்பு டிப்பு டிப்பு குமரி...
7. மெளனம் பேசியதே- என் அன்பே என் அன்பே...
8. சங்கமம்- வராக நதிக்கரையோரம்.