மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

  அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

பகிர்வு ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200ஓவியங்கள்: ராமமூர்த்தி

`சூப்' கற்றுத் தந்த பாடம்!

  அனுபவங்கள் பேசுகின்றன!

ஒரு திருமண ரிசப்ஷனுக்குப் போயிருந்தேன். சாப்பிடும்போது ஒரு தெர்மாகோல் தொன்னையில் சூப் வைத்தார்கள். அதைக் குடிக்க எடுக்கையில், தொன்னை சாய்ந்து சூப் கையில் கொட்டிவிட்டது. மிகவும் சூடாக இருந்ததால் கை தோல் கொப்புளித்துவிட்டது. எரிச்சல் தாங்காமல் அவஸ்தைப்படுவதைப் பார்த்து, அங்கு வேலை செய்யும் பெண்மணி (கேட்டரிங்) என்னை அழைத்துப்போய் கையில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்தார். பக்கத்தில் தயாராக முதலுதவிப்பெட்டி இருந்தது. அதில் பேண்டேஜ், பஞ்சு, தலைவலி மாத்திரை, தைலம் போன்றவையும் இருந்தன. இதுமாதிரி எல்லா திருமண மண்டபங்களிலும் அவசர முதலுதவிக்கு தேவையானவற்றை வைக்கலாமே! மேலும், சாப்பிடும்போது எல்லோரும் அரட்டை அடித்தபடி சாப்பிடுவதைத் தவிர்த்து, உணவில் கவனம் வைப்பதும் முக்கியம் என இதிலிருந்து தெரிந்துகொண்டேன்.

- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்

இப்படியும் ஒரு ரயில் சிநேகம்!

  அனுபவங்கள் பேசுகின்றன!

ஒருமுறை நான் தனியாக சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றேன். திரும்பி வரும் வழியில் பயணச்சீட்டு போக 100 ரூபாய்தான் என்னிடம் மீதம் இருந்தது. ரயில் அதிகாரி என் பயணச்சீட்டுக்குரிய அடையாள அட்டை கேட்டபோது நான் அதனை எடுத்து வர மறந்துவிட்டதை சொன்னேன். அதற்கு 1,600 ரூபாய் அபராதம் விதித்தார். என் அருகில் அமர்ந்திருந்த அந்தத் தோழி, எனக்கு 1,600 ரூபாய் பண உதவி செய்து என் மானத்தைக் காத்து சென்னை வர பேருதவி செய்தார். அவரை நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன். அன்று அந்த தோழி உருவில் தெய்வத்தைக் கண்டேன்.

- எஸ்.விஜிபிரகாஷ், சென்னை - 94

வடிவேலு போல..!

  அனுபவங்கள் பேசுகின்றன!

சமீபத்தில் புகழ்பெற்ற ஓர் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். அழகாக ‘பேக்’ செய்யப்பட்ட பெட்டிகளில் ‘உலர்ந்த பழங்கள், நட்ஸ்’ என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலே இருந்த கண்ணாடி பேப்பர் வழியே, உலர் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா தென்பட்டன. விலையும் நியாயமானதாக இருக்கவே, வாங்கி வந்து வீட்டில் பிரித்துப் பார்த்தால், ஒரு பெரிய பாக்கெட்டில் கல்கண்டு வைக்கப்பட்டு, மேலாக சிறிது டிரை ஃப்ரூட் வகைகள், கல்கண்டு பாக்கெட் தெரியாதவாறு, பரப்பி வைக்கப்பட்டிருந்தன. கல்கண்டு எப்போதும் டிரை ஃப்ரூட் லிஸ்ட்டில் வந்தது என்று தெரியவில்லை!

பந்து போல் பேப்பர் சுருட்டப்பட்டு, அதன் மேல் சிறிது மல்லிகைச்சரம் சுற்றப்பட்டு, மல்லிகைப்பந்து என ஏமாற்றப்பட்ட வடிவேலுவைப் போலத்தான் நாங்களும் ஏமாந்து போனோம்.

ஆண்டவன் சந்நிதியிலேயே இப்படியா? புதிய இடங்களுக்கு போகும்போது, 'போனோமா, வந்தோமா' என்பதைத் தவிர, எதையும் வாங்கி ஏமாறாதீர்கள்.

- என்.சாந்தினி, மதுரை