
இயற்கையோடு வாழு!

தான்சானியா நாட்டின் நொராங்கொரா என்னும் இடம் அடர்ந்த காட்டுப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. காடுகளில் மரங்களுக்கு இடையே குடியிருப்புகளை அமைத்தல் பாதுக்காப்பில்லாததாலும், நகர்ப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதாலும் வித்தியாசமான முறையில் மரங்களுக்கு நடுவே வீடுகளை அமைத்திருக்கிறார்கள். அடர்ந்த மரங்களுக்கு நடுவே மரக்கட்டைகளை நட்டு எடை குறைவான, அதே நேரத்தில் வலிமையான பொருட்களைக் கொண்டு உருண்டை வடிவ வீடுகளை அமைத்திருக்கிறார்கள்.

வீட்டின் உட்பகுதி ஸ்டார் ஹோட்டல்களைப் போல எல்லா வசதிகளைக் கொண்டதாகவும் அழகாகவும் இருக்கிறது. விலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் உயரத்தில் இருப்பதால் பாதுகாப்பாக உணர்வதாக இங்கே வசிப்பவர்கள் கூறுகிறார்கள். மேலும், நகரத்தைவிட்டு விலகி இருப்பதால் இயற்கையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமாகவும் வாழலாம். இந்த வீடுகள் தினசரி வாடகைக்கு ஹோட்டலாகவும் பயன்படுத்தப்படுகிறதாம். மரங்களை அழிக்காமல் காடுகளுக்கு மத்தியில் இயற்கையை ரசித்தபடி வாழ்வது பேரின்பம்தானே!
- விக்கி