உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!

 `அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!

`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!

 `அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!

ணையத்தில் தினம் தினம் டப்ஸ்மாஷ் என்டர்டெயினர்கள் வலம் வரத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொண்ணும் ஒரு ரகம்னா செளபாக்கியாவின் டப்ஸ்மாஷ் தனி ரகம். வசனமே இல்லாத `மொழி' ஜோதிகா பெர்ஃபார்மன்ஸை     தன் டப்ஸ்மாஷில் பின்னிப் பெடலெடுத்திருக்கும் இந்த சேச்சியைத் தொடர்புகொண்டால், `` `விண்ணைத்தாண்டி வருவாயா' பார்த்துருக்கீங்களா அதுல த்ரிஷாவோட பாட்டியா நடிச்சது என்னோட பாட்டிதான். லஷ்மி ராமகிருஷ்ணனின் `அம்மணி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் இவர்தான்!'' என்று பாட்டியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். விடுமுறை தினத்தை எர்ணாகுளத்தில் கழித்துக்கொண்டிருந்த பாட்டி-பேத்தியுடனான ஒரு பேட்டி...

``டப்ஸ்மாஷ்  என்றாலே வசனத்தைத்தானே தேர்ந்தெடுப்பாங்க. நீங்க எப்படி இதைத் தேர்ந்தெடுத்தீங்க?''

``இதுவரை செஞ்ச டப்ஷ்மாஷ் எல்லாமே மூணு நிமிஷம் வரைக்கும் செஞ்சிருக்கேன். நிறைய டப்ஸ்மாஷ் பண்ணி இருக்கேன். அடிப்படையில நான் ஒரு டான்ஸர். எக்ஸ்பிரஷனுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பேன்.டப்ஸ்மாஷ்ல ஏன் இதை முயற்சி பண்ணக்கூடாதுன்னு தோணுனப்போதான் `மொழி' படம் ஞாபகத்துக்கு வந்தது. ஆனா இவ்வளவு பெரிய ரீச் ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

``குடும்பம் பத்தி சொல்லுங்க..?''

``கேரளாவில எர்ணாகுளம்தான் சொந்த ஊரு. அப்பா அம்மா ரெண்டு பேருமே சீரியல் ஆர்ட்டிஸ்ட். நான் இப்போ டான்ஸ்ல  முதுகலை முடிச்சுட்டு ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஆரம்பத்துல மலையாளத்துல சலீம்குமாரோட டப்ஸ்மாஷ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. வீட்டுலயும் உற்சாகப்படுத்துனாங்க. நான் மலையாளிதான். ஆனா நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன்.''

``சென்னை வந்தது உண்டா?''

`` சென்னை வந்தப்போ அங்கே மைலாப்பூர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்கே பார்த்தாலும் டான்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களாவே அங்கே இருக்கும்.அதனாலே மயிலாப்பூர்தான் என்னோட ஃபேவரைட்!''

``அடுத்து என்ன? சினிமா தானா?''

``இப்போ வரைக்கும் பிளான் இல்லை. பிளான் பண்ணுனோம்னா அது நடக்காம போயிடுமோங்கிற பயம் எனக்கு எப்போவுமே இருக்கும். நமக்குன்னு கிடைக்கிற ஒரு விஷயம் நமக்குத்தான் கிடைக்கும். அதனால எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஒரு வேளை சினிமா வாய்ப்பு வந்தாலும் சந்தோஷமா ஏத்துப்பேன்.''

 `அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!

``தமிழ்ப் படங்கள் ரொம்ப இஷ்டமா?''

``அச்சச்சோ... உங்களுக்குத் தெரியாது. வீட்டுல எப்போதும் தமிழ் சேனல் தான் அதிகமா பார்ப்பேன். சூர்யா-ஜோதிகான்னா அவ்வளவு உயிர் எனக்கு. சூர்யா-ஜோதிகா டப்ஸ்மாஷே நிறைய பண்ணி இருக்கேன். `காக்க காக்க' படம்லாம் எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. இந்த மொழி டப்ஸ்மாஷ் வீடியோவை ஜோ பார்த்தாங்கன்னா அதுவே எனக்குப் போதும். ஒரு அவார்டு வாங்குன ஃபீல் கிடைச்ச மாதிரிதான் அது.

அப்புறம் கெளதம் மேனன் ரொம்ப பிடிக்கும். பாட்டி, `விண்ணைத்தாண்டி வருவாயா' ஷூட்டிங்ல இருந்த டைம்ல அவரைப் பார்க்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். நடக்கவே இல்லை...'' எனச் சொல்லும்போதே பாட்டி சுப்புலட்சுமி தொடர்கிறார்.

``ஆமாப்பா... அப்போ இவ ஸ்பாட்டுக்கு வர லேட்டாகிடுச்சு. நாங்க பேக்கப் பண்ணி வேற இடத்துக்குப் போயிட்டோம்.  இன்னமும் எங்கிட்ட சொல்லிட்டே இருப்பா, சூர்யா கூட ஒரு படமாவது பண்ணுங்க பாட்டி... உங்க மூலமா சூர்யாவையாச்சும் பார்த்துடுறேன்னு.

 எனக்கு இப்போ 80 வயசு ஆகிடுச்சு. பூர்விகம் எல்லாம் தமிழ்நாடுதான். எனக்கு அப்போ இருந்தே கலைகள்ல ஆர்வம். அப்போ பொண்னுங்களுக்கு இருந்த கட்டுப்பாடு அதிகம். என்னோட கணவர் தான் என்னோட ஆர்வத்துக்கு பக்கபலமா இருந்தாரு. பாட்டு பாடுவேன். நாடகங்கள், அரங்கேற்றங்களிலும் பாடுவேன்.

2002ல தான் முதல் தடவை சினிமா வாய்ப்பு கெடச்சது. தொடர்ந்து ஒரு 55 மலையாளப் படங்கள் பண்ணினேன். அதுக்குப் பின்னாலதான் `ஒரு பொண்ணு ஒரு பையன்'னு தமிழ்ல முதல் படம் நடிச்சேன். `ராமன் தேடிய சீதை', `சிலம்பாட்டம்' படங்கள்ல நடிச்சேன்.''

``கெளதம் மேனன்கிட்ட இப்பவும் பேசுவீங்களா?''

``எனக்கு `விண்ணைத்தாண்டி வருவாயா' நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம். அந்தப் படத்தை மூணு மொழியில எடுத்தாங்க. ஒவ்வொரு மொழியிலேயும் வேற வேற ஆர்ட்டிஸ்ட் நடிச்சிருப்பாங்க. ஆனா என்னோட கேரக்டரை மூணுலேயும் நான்தான் நடிச்சிருப்பேன். அந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை வெச்சிருந்தார் கெளதம் மேனன்.

இப்போவும் ஏதாவது விசேஷம், பண்டிகைனா வாழ்த்து சொல்ல போன் பண்ணுவேன். `எனக்கு அதுக்குப் பிறகு உங்களை நடிக்க வைப்பதற்கான கேரக்டர் இன்னும் வரலையே பாட்டி. எப்போதெல்லாம்  கேரக்டர் தேவைப்படுதோ அப்பெல்லாம் என் படத்துல கண்டிப்பா நீங்க இருப்பீங்க!'ன்னு சொல்லுவாரு.

 `விண்ணைத்தாண்டி வருவாயா'ல லட்சுமி ராமகிருஷ்ணன்தான் எனக்கு மருமகளா நடிச்சிருப்பாங்க. அப்போ இருந்தே சொல்லிட்டு இருப்பாங்க. நான் படம் டைரக்ட் பண்ணுனா கண்டிப்பா நீங்க அதுல இருப்பீங்கன்னு. அப்படித்தான் `அம்மணி' படத்துல என்னைய நடிக்கக் கூப்பிட்டாங்க.''

 `அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!

`` `அம்மணி'ல கொஞ்சம் சவாலானா  கேரக்டர். அந்த அனுபவங்கள்?''

``சென்னை வந்த பிறகுதான் `அம்மணி'ல என்ன பண்ணப் போறோம்னு தெரியும். வெயில்ல குப்பை எடுக்குற மாதிரிதான் காட்சிகள் இருக்கும். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் என்னைய ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாங்க. படம் வெளிவந்த பின்னால அதுக்குக் கிடைச்ச பாராட்டுகள் எல்லாமே இன்னும் இதுமாதிரி கேரக்டர்கள் பண்ணணும்னு உற்சாகத்தைக் கொடுத்திருக்கு!''

``இந்த வயசுலேயும் இவ்வளவு எனர்ஜி எப்படி?''

``நான் ஹார்லிக்ஸ் விளம்பரத்துல நடிச்சேன், இப்போ கூட ரன்பீர் கூட லேஸ் விளம்பரத்துல நடிச்சேன். நான் என்னோட வேலையை ரொம்ப பிடிச்சுப் போயி பண்றேன். காலையில 9-5 வேலைக்குப் போயிட்டு வந்தா இப்படி இருப்பனானு எனக்குத் தெரியல. இப்போ வரைக்கும் என் வயசு பத்தி நான் நினைச்சுப் பார்த்ததுகூட இல்லை. எப்போ எனக்கு இதெல்லாம் போதும்னு தோணுதோ அதுவரைக்கும் கலைத்துறையில எதாச்சும் ஒரு வடிவத்துல இருந்துட்டே இருப்பேன்.''

``செளபாக்கியாவோட டப்ஸ்மாஷ் எல்லாம் பார்த்திருக்கீங்களா?''

``அவ நிறைய பண்ணுவா. எது எதுன்னு எனக்கு சரியா தெரியாது. எங்கிட்ட கொண்டு வந்து காட்டுவா... பார்த்துட்டு பாராட்டுவேன். செளபாக்கியாவோட மோகினி ஆட்டம் அரங்கேற்றத்துல எல்லாம் நான்தான் பாடியிருக்கேன். எனக்குப் பிறகு என் பொண்ணு நடிப்புத் துறையில இருந்தா. இப்போ என் பேத்தியும் கலைத்துறை மேல இவ்வளவு ஈடுபாட்டோட இருக்கிறது எனக்குப் பெருமையா இருக்கு!''

- ந.புஹாரி ராஜா