உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

தூங்கிக்கிட்டே படிக்கலாம்!

தூங்கிக்கிட்டே படிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தூங்கிக்கிட்டே படிக்கலாம்!

தூங்கிக்கிட்டே படிக்கலாம்!

லருக்கும் பிடிச்ச விஷயங்கள்ல ஒண்ணு புத்தகத்தோட வாசம். புத்தகம் சில பேரை வேற உலகத்துக்குக் கூட்டிப்போகும். அதே நேரத்துல சில பேரைக் குறட்டை விடவும் செய்யும். இந்த ரெண்டையும் ஒண்ணு சேர்த்த மாதிரி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கட்டப்பட்டுள்ள ‘புக் அண்ட் பெட்' (Book and Bed) ஹோட்டல் இப்போ அங்கே ஓர் அடையாளமாகவே மாறிக்கிட்டு வருது.

தூங்கிக்கிட்டே படிக்கலாம்!

இந்த ஹோட்டலின் வெற்றிக்கதை ரொம்ப சிம்பிள். இங்கே வர்ற வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடிச்ச புத்தகத்தை செலெக்ட் பண்ணிட்டு, புத்தக அலமாரிக்கு நடுவில் இருக்கிற பெட் போடப்பட்ட பங்க்ல படுத்துக்கிட்டே படிக்கலாம். தூக்கம் வந்தாத் தூங்கலாம். போர் அடிச்சா தாகத்தைத் தணிக்க பீர் விற்பனையும் உண்டு. பங்க் அளவைப் பொறுத்து 30 முதல் 50 அமெரிக்க டாலர் வரை இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போனமாசம் ஆரம்பிச்ச இந்த ஹோட்டல் ஹிட் அடித்ததால், கியோட்டோவில் அடுத்த கிளையோட திறப்புவிழாவுக்குத் தயாராகிட்டு இருக்கு இந்த ஹோட்டலோட நிர்வாகம்.

நம்ம ஊர்ல லைப்ரரி போய்த் தூங்குவோம். ஜப்பான்ல காசு கட்டி ரூம் எடுத்துத் தூங்குறாங்க. அவ்வளவுதான் பாஸ் வித்தியாசம்!

- கருப்பு