
டெக்மோரா

ஹலோ மிஸ்டர் ரெமோ பாய்ஸ்... உங்களோட தில்லாலங்கடி வேலைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்குற அப்டேட்ட வெளியிட்டிருக்கு `இன்ஸ்டாகிராம்'. நாக்கு தள்ளும் செல்ஃபி ஆரம்பிச்சு, பாய்ஸ் படத்துல வர்ற செந்தில் மாதிரி எந்த ஊர்ல எந்த ஹோட்டல்ல என்ன தின்னோம்னு மெனு கார்டு போட்டு வெறுப்பேத்துறவங்க இருக்குற இந்த இன்ஸ்டாகிராமோட ப்ளஸ் இதுல உள்ள போட்டோவை டவுன்லோட் பண்ண முடியாது. இன்பாக்ஸ்ல அனுப்புன இமேஜை மட்டும் பார்க்கலாம் ஆனா டவுன்லோட் பண்ண முடியாது.

நம்மாளுங்க சும்மாவே ஐடியா கண்டுபுடிச்சு க்ராக் பண்ணுவாங்க. அழகா ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பொழப்பு நடத்துன எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. நேரடியாக சாட்டிங் செய்பவர்கள் ஸ்க்ரீன் சாட் எடுத்தால் உடனடியாக அதனை அனுப்பியவருக்கு நோட்டிஃபிகேஷன் போகுமாம். அதன்படி, உங்களுடன் நேரடி சாட்டில் ஈடுபடுபவர் உங்களது மெசேஜைப் பார்த்த பிறகு, ஸ்க்ரீன் சாட் எடுத்தால் அது இனி உங்களுக்கு நோட்டிஃபிகேசன் காட்டப்படும். இந்த ஆப்சன் ஏற்கெனவே `ஸ்நேப் சாட்'டில் இருந்தது. ஆனால் இன்ஸ்டாகிராம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட தளம். அது அறிமுகம் செய்திருப்பது, சிலருக்கு அதிர்ச்சியாகவும், சிலருக்கு சந்தோஷமாகவும் மாறியுள்ளது. மேலும், போட்டோ, வீடியோக்களை எடுக்க `ரைட் ஸ்வைப்' உள்ளிட்ட அப்டேட்டுகளும் இதில் அடக்கம்.
`இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்' என ஒருநாள் மட்டுமே பார்வையாளர்களுக்குத் தெரியும் வசதியை அறிமுகம் செய்திருந்த இன்ஸ்டாகிராம் அதில் பூமராங் எனும் அசையும் வீடியோக்களுக்கான வசதியையும் தந்துள்ளது. சும்மாவே இன்ஸ்டாகிராமில் ஹேஷ்டேக் போட்டு தெறிக்க விடுபவர்களுக்கு இது எக்ஸ்ட்ரா மைலேஜ். அதே சமயம் ப்ரைவஸி லெவலையும் ஸ்க்ரீன்ஷாட் நோட்டிஃபிகேஷன் மூலம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமாகி வரும் இன்ஸ்டகிராம், சோஷியல் மீடியா ரேஸில் முந்துகிறது. ஃபேஸ்புக்கில் பல பதிவுகளுக்கு நடுவே சிக்காமல் புகைப்படம் பதிவிடும் செல்ஃபி கிங்/குயின்கள் இங்குதான் வாழ்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். புகைப்படப் பகிர்வுத் தளத்தின் புதிய அப்டேட்கள் தெறிக்க விடுவதால் `இன்ஸ்டாகிராமிகள்' மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வருடத்தில் இன்ஸ்டாகிராம் மேலும் முக்கிய அப்டேட்டுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்புறம் என்ன சுட்டுத் தள்ள வேண்டியதுதானே...
- டெக்கி கய்