உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

சேவல் பண்ணை நினைவுகள்!

சேவல் பண்ணை நினைவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சேவல் பண்ணை நினைவுகள்!

சேவல் பண்ணை நினைவுகள்!

சேவல் பண்ணை நினைவுகள்!

பெருநகரத்திற்கு வேலைக்கு வரும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சில காலத்தையாவது மேன்சனில் கழித்திருப்பார்கள். நெருக்கடியாகத் தெரிந்த சில தருணங்கள் பின்னாளில் யோசிக்கும்போது சுவாரஸ்யமான நினைவுகளாக மாறியிருக்கும்.

* பஸ்ல பக்கத்து சீட்ல வர்றவரோட பேரைக்கூட தெரிஞ்சுக்க மெனக்கெடாத தலைமுறை இது. இப்படிப்பட்ட ஆளுங்களை முன்னேபின்னே தெரியாதவங்களோட ஒரே ரூம்ல தங்க வைக்கிறது ரொம்பவே கஷ்டமான காரியம். ஆனால் அப்படி அறிமுகமாகி, பின்னாளில் மாப்பிள்ளை, மச்சானாக நட்பாவது தனிக்கதை.

* `லீவ்தானே மெதுவா எழுந்திரிச்சுக்கலாம்'னு நினைச்சா காலைக்கடனை முடிக்கவே பாத்ரூமுக்கு வெளியே பெரிய லைன்ல நிற்க வேண்டியிருக்கும். கொஞ்சமே கொஞ்சமான கருணையோட பைப்ல வர்ற தண்ணியில் சிக்கனமா துவைச்சு முடிச்சு, காயப்போட இடமில்லாம ஜன்னல், கதவைத் துணியால் அலங்கரிப்பாங்க.

* அடுத்த தர்மசங்கடமான பிரச்னை என்னன்னா... காயப்போட்ட துணியை எடுக்கப்போனா ஒரே கலர்ல உள்ளாடைகள் கொடியில் காத்துல ஆடும். நம்மளோடது தானான்னு நமக்கே சந்தேகம் வந்து, பல உள்ளாடைகள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு மாசக்கணக்கா காத்துல ஆடிக்கிட்டு இருக்கும்.

* எல்லா மேன்சன்லயும் நேரத்துக்கு மோட்டார் போடுறதுல இருந்து, கேட்டைப் பூட்டுறது வரை அத்தனை பொறுப்புகளையும் கவனிச்சுக்கிறது வயசான ஒரு பெரியவராத்தான் இருக்கும். இவரை மீறி அங்கே எதுவும் நடக்காது. சில நேரங்கள்ல உக்கிரமா இருந்தாலும், பல நேரங்கள்ல கேட்டதெல்லாம் செஞ்சுகொடுத்து மனசை அள்ளுவாங்க.

* படிக்கட்டு அல்லது ஜன்னல் பக்கத்துல இருக்கிற இடம்தான் மேன்சன்ல அறிவிக்கப்படாத ஸ்மோக்கிங் ஏரியா. கும்பலா நின்னு ஊதித்தள்ளும்போது அந்தப் பக்கம் போனா, பழைய படங்கள்ல சொர்க்கத்தைக் காட்டும்போது புகை போடுவாங்களே, அப்படி இருக்கும்.

* ஒவ்வொரு மேன்சன்லயும் மாப்பிள்ளை பெஞ்ச் மாதிரி அட்ராசிட்டி பண்ற ரூம் ஒண்ணாவது இருக்கும். பெரும்பாலும் இவங்கதான் அந்த மேன்சன்ல பல காலமா குப்பை கொட்டுற மூத்த குடிமக்கள். அடுத்தவனைத் தூங்கவிடாம நைட் முழுக்கக் கத்தி கலாட்டா பண்றதுல இருந்து, ரூம்ல உட்கார்ந்து சரக்கடிக்கறது வரை ‘பிரேக் த ரூல்ஸ்’ தான் இவங்களோட கொள்கையே!

* ரூமை சுத்தம் செய்ய துடைப்பமே தேவையில்லைனு உலகத்துக்குக் கண்டுபிடிச்சு சொன்னதே இவங்கதான். பெட்ஷீட்டை நாலா மடிச்சு காத்துல வேகமா வீசியே தூசியைத் தூர விரட்டுற அந்த அழகிருக்கே, பார்க்கக் கண் ரெண்டு போதாது!

- கருப்பு