உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

``செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது, தன் தோளுக்குப் பின்னால் பாம்பு நெளிவதைப் பார்த்த பிரவீன்...''

- இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...

கதை விடுறாங்க!

ஸ்ரீராமன் : பின்புறம் திரும்பிப் பார்க்கும்போதுதான் தெரிந்தது அது `நாகினி' ஷிவன்யா என்று! `நீ இங்கே இருக்கே. ஷ்ரேயா எங்கே?'ன்னு கேட்டான். நாகினி உடனடியாக மறைந்தாள்.

இம்ரான் இம்மு : பாம்புடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க நினைத்த பிரவீனை பாம்பு படம் எடுத்து கழுத்தில் ஒரு போடு போட்டது. நுரைதள்ளி பிரவீன் கீழே விழுந்தான். அடுத்த அடிமையைத் தேடி பாம்பு நெளிந்து சென்றது.

ஜெயசூரியா : தன் வாழ்க்கையின் கடைசி செல்ஃபியை எடுத்துக்கொண்டான் பிரவீன்.

மதன் குமார் : பாம்பு ஃபோகஸ் ஆகிற மாதிரி கேமராவை அட்ஜஸ்ட் செய்யத் தொடங்கினான். `இவன்லாம் திருந்தவே மாட்டான்'னு டென்ஷனாகி, பாம்பு அந்த இடத்தைக் காலி செய்தது.

மணிகண்டன் : அப்படியே பாம்புடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டான். லைக்ஸ் குவியத் தொடங்குவதைப் பார்க்கும்போதே பாம்பு அவனைப் போட்டுத்தள்ளியது.

பிரேம் விஜய் : 18 வயது நாகினியாய் அந்தப் பாம்பு மாறும் என ஜொள்ளுவிட்டபடி பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அது 50 வயது `நீயா' பாம்பாக மாறியது. அடுத்த நொடி பாம்பு கொத்தாமலே வாயில் நுரைதள்ளி பிரவீன் கீழே விழுந்தான்.

பாலா :
மொபைலைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான். திரும்பி வந்து பார்த்தால் அந்த இடத்தில் பாம்பையும் காணோம். மொபைலையும் காணோம். ஐ போன் போச்சே!