உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

மிழ் சினிமா இசை ரசிகர்களில் யூத்களின் சாய்ஸான பாடலாசிரியர் மதன் கார்க்கியின் பாடல்கள்தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ்...

சினிமா விடுகதை!

1. எல்லோரும் வாழ்க்கையை வெறுத்து அலுப்பாய் சொல்லும் வார்த்தைகளை பல்லவியாய் வைத்து எழுதிய பாடலில் அடித்தாரே மாஸ் ஹிட். வரிகளில் புதுமை, வார்த்தைகளில் இளமை என யூத்களின் பல்ஸ் பிடித்த பாடலுக்கு ஹாரிஸின் இசை நீண்ட இடைவெளிக்குப் பிறகு புத்துணர்ச்சி ஊட்டியதே. ராஜாவை ஞாபகப்படுத்தும் படத்தின் தலைப்பு. பாட்டு என்னன்னு சொல்லுங்க பாஸ்?

2. காதல் என்ற ஒற்றை வார்த்தைக்கு உலகத்தின் அத்தனை மொழிகளிலும் அர்த்தம் சொன்ன டூயட். நாக்கு சுளுக்கிகொண்டாலும் பரவாயில்லையென மக்கள் முணுமுணுத்து ஹிட்டாக்கினார்கள். பாட்டு காதலைச் சொன்னாலும் படம் நட்பைச் சொன்னது. நீங்க பாட்டைச் சொல்லுங்க பாஸ்!

3.
டப்பிங் படம்தான். ஆனால் தியேட்டரில் படத்தின் டைட்டில் இல்லாமல் கூட்டம் கூடியது. வசூலில் கில்லியானது. ஹீரோவுக்கு சமமான வில்லன் பாத்திரம் இருந்தாலும் நிஜ ஹீரோவும் வில்லனும் வேற லெவல் படத்தில். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிய படத்தின் தீம் பாடலைச் சொல்லுங்களேன் பாஸ்.

4.
தேடல் இல்லாத வாழ்க்கை இனிக்காது என்று வைரமுத்து எழுதிய பாட்டுக்கு உலகமே இப்போது தேடலில் இருக்கும் டிஜிட்டல் வார்த்தையை வைத்து பல்லவி எழுதி பரவல் வைரலாக்கினார். இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள்... யெஸ் அவரே பாடின பாட்டுதான். எழுதியவர் சொன்ன இடத்தில் தேடிப்பார்த்தாலும் ஹிட்டென காண்பிக்கும் இப்போதும். ரொம்பத் தேடாம சட்டுனு பாட்டைச் சொல்லுங்க பாஸ்!

5
விஜய் சேதுபதிக்கு பெரிய ப்ரேக் கொடுத்த சின்ன பட்ஜெட் படத்தில் டீன் ஏஜ் பெண்கள் அனைவரின் வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக்கொண்ட பாடல் வேண்டுதல் பாட்டு பாஸ். ஆசைப்படாம பாட்டுச் சொல்லுங்க. பார்க்கலாம்.

6. என்ன அர்த்தம்னு இதுவரைக்கும் தெரியாது. ஆனா இந்தப் பாட்டை உச்சரிக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். ஒரு நடிகைக்கு இன்னொரு நடிகை பாடிய பாட்டு. ஹிட்டடித்த பாட்டுக்கு கும்கி ஹீரோயின் சுற்றிச் சுற்றி ஆடினாரே... செல்போன் கடை ஹீரோவும் கட்டிக்கொண்டு ஓடினாரே... என்ன பாட்டுன்னு சூதானமா சொல்லிடுங்க.

7.
இந்த சினிமா விடுகதையின் முதல் கேள்விக்கும் இந்தப் பாட்டுக்கும் மட்டுமல்ல. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் அபிமான டைம்பாஸுக்கும் இந்தப் பாட்டுக்குமே பெரிய சம்பந்தம் இருக்கே பாஸ். இதுக்கு மேல சொன்ன பாட்டோட முதல் வரியை என்னைப் பார்த்துக் கேட்பீங்க நீங்க. ஆமா என்னப் பாட்டு பாஸ்?

8.
மொபைல் கைல இருந்தா அதுவும் அழகான லொக்கேஷன்ல நீங்க இருந்தா செய்யும் முதல் வேலைதான் பாட்டின் ஹிட் வரி. ஆனால் முதல் வரி இல்லை. இந்த வார்த்தைக்கு தமிழ்ல இன்னமும் சரியான வார்த்தை இல்லைனாலும் இதையே தமிழா மாத்திட்டாங்க தமிழர்கள். இதைப் பாடாத ரசிகர்களும் இல்லை. இதை எடுக்காத மனிதர்களே இல்லை எனலாம். போட்டோ எடுத்து ப்ரொஃபைல் மாற்றாமல் பாட்டைச் சொல்லுங்க பாஸ்!

- கே.கணேஷ்குமார்

 விடைகள்:  1. கோ - என்னமோ ஏதோ, 2. நண்பன் - அஸ்குலஸ்கா, 3. நான் ஈ - ஈடா ஈடா, 4. துப்பாக்கி - கூகுள் கூகுள், 5. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - ப்ரேயர் சாங், 6. பாண்டிய நாடு - ஃபை ஃபை ஃபை, 7. என்னமோ ஏதோ - நீ என்ன பெரிய அப்பாடக்கரா, 8. கத்தி- செல்ஃபி புள்ள