
பீட்சா மான்!

வியாபாரத்தில் பல புதுமையான முயற்சிகளைக் கையாளும் டொமினோஸ் பீட்சா நிறுவனம் இந்த ஆண்டும் ஒரு புது உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு பீட்சா டெலிவரியில் தாமதம் ஏற்படலாம் எனக் கருதி, அதைத் தவிர்க்க டொமினோஸ் பீட்சா நிறுவனம் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிச்சறுக்கு வண்டியை இழுக்கும் பெரியகொம்புகள் கொண்ட கலைமான்கள் மூலம் பீட்சாக்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக மான்களுக்கு மிருகப் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அந்த மான்களின் உடலில் ஜி.பி.எஸ் சென்சார்களைப் பொருத்தியிருப்பதால் டெலிவரி செய்யப்படும் பொருளை டிராக் செய்துகொள்ளலாமாம். இதை வித்தியாசமான ஏற்பாடு எனச் சிலர் பாராட்டினாலும், மான்களை வதைசெய்வதாகச் சிலர் எதிர்ப்புக்குரல் காட்டியுள்ளனர்.
ப்ளூ க்ராஸ்... நீங்க எங்க இருக்கீங்க..?
- விக்கி