
FOREIGN சரக்கு

உலக சீரியல் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த சீரியல் `தி வாக்கிங் டெட்' அதில் நடிக்கும் அலனா மாஸ்டர்ஸன்னுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக அவரின் உடல் எடையைக் கிண்டலடித்து சிலர் விமர்சனம் செய்ய, பொங்கி எழுந்துவிட்டார் அலனா. `குழந்தை பிறந்தபின் பெண்கள் எடை அதிகரிப்பது சகஜம்தான். இது தெரியாதவர்கள் அவர்கள் வீட்டுப் பெண்களிடம் கேட்டுக்கொள்ளவும்' என அவர் ஸ்டேட்டஸ் தட்ட, விவாதம் சூடு பிடிக்கிறது. #அம்மாடா

`செம தில்லுதான் இந்தப் பொண்ணுக்கு' என ஹார்ட் முழுக்க ஆச்சரியம் வழிய கிகி ஹாடிட்டைப் புகழ்கிறார்கள் ரசிகர்கள். மதிப்புமிக்க விக்டோரியா ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் போகும் வாய்ப்பு கிகிக்குக் கிடைத்தது. ஆனால் அப்படி நடக்கும்போது சட்டென மேலாடை நழுவிவிட, கொஞ்சமும் அசராமல் நிலைமையை சமாளித்து நடைபோட்டார் கிகி. `இந்த ஷோவில் கலந்துகொள்வது என் கனவு. அதை ஆடைக் கோளாறுகளுக்காக எல்லாம் விட்டுத்தர முடியாது' என அவர் கொடுத்த ஸ்டேட்மென்ட்தான் இந்தப் புகழ்மாலைகளுக்குக் காரணம். #கிழிகிழி

ஸ்னாப்சாட் ரசிகர்கள் எல்லாம் செம குஷியாக இருக்கிறார்கள். காரணம் லேட்டஸ்ட் வரவான ஜெனிஃபர் அனிஸ்டன். சோஷியல் மீடியாக்களில் ஜெனிஃபர் பயங்கர ஆக்டிவ். இப்போது ஸ்னாப்சாட்டிலும் கால் பதித்து செல்ஃபிகளைத் தட்டுகிறார். வாயைக் குவித்து டக் போஸ் தந்து அவர் போட்ட முதல் செல்ஃபிக்கே எக்கச்சக்க லைக்ஸ் தட்டுகிறார்கள் நெட்டிசன்ஸ். #க்ளிக்.

ஹாலிவுட்டின் ஸ்டார் ஜோடியான ஜானி டெப்பும் ஆம்பர் ஹெர்டும் பரஸ்பரப் புரிதலோடு பிரிவதாக அறிவித்தார்கள். அப்போதே விவாகரத்து மூலம் கிடைக்கப்போகும் பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்தார் ஆம்பர். இப்போது விவாகரத்து முடிவான நிலையில் முதல் கட்டமாக மூன்றரை லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்திருக்கிறார் ஆம்பர். #நல்ல மனம் வாழ்க.
- ஃபாலோயர்