உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

‘தலை’விதியை மாத்தலாம்!

‘தலை’விதியை மாத்தலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘தலை’விதியை மாத்தலாம்!

‘தலை’விதியை மாத்தலாம்!

தயம், நுரையீரல் வரிசையில் அடுத்ததாகத் தலையையே வேறு ஒருவருக்கு மாற்றிப் பொருத்தும் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தயாராகிவிட்டார்கள் மருத்துவர்கள். பார்த்ததுமே பதறுதா? அட ஆமாங்க. இத்தாலியைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் செர்ஜியோ கேனவெரோதான் இந்த முதல் தலைமாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்யப்போகிறாராம். அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் இந்த ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்!

‘தலை’விதியை மாத்தலாம்!

மரபியல் உடற்குறைபாடு உடைய ரஷ்யாவைச் சேர்ந்த வேலரி ஸ்பிரிடோனோவ் என்பவர்,  இந்த ஆபரேஷனுக்குத் தாமாகவே முன்வந்து, முதல் உறுப்பு மாற்றாளராகச் சேர்ந்திருக்கிறாராம். ஆனால், `ஒருவரின் தலையை இன்னொருவரின் உடலோடு பொருத்துவது எளிதல்ல' என உயிரி- மருத்துவத்துறைப் பேராசிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். டாக்டர் செர்ஜியோ கேனவெரோ இந்த ஆபரேஷனுக்காக, `உலகிலேயே முதல்முறையாக நோயாளியின் புரோட்டாகாலை உருவாக்க விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறோம்' என்கிறார்.

வரும் ஜனவரியில் ஒரு குரங்கை வைத்து இந்த முயற்சிகளைச் சோதித்துப் பார்க்கப் போகிறார்களாம். இதுசாத்தியமானால் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.

அடி ஆத்தீ!

- விக்கி