உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

கைது செய்யப்பட்ட மன்னர் நிறுவனத்தின் மூன்றெழுத்து நபரால் பல நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம். போலீஸ் விசாரணையில் எங்கே தன் பெயரை இழுத்துவிட்டுவிடுவாரோ என அஞ்சி நடுங்குகிறார்களாம்.

• விலங்கு படத்தின் தெலுங்கு பதிப்புக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம் ‘பிரகாச’ நடிகர். பேட்டி, இசை வெளியீடு என எல்லாம் அங்கேயே நடப்பதால் தமிழ் வினியோகஸ்தர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம்.

• ‘சைக்கோ’ என்று சொல்லித் திட்டி டிரெண்ட் செய்யும் அளவுக்கு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட இனிஷியல் பிரகாசத்தை அம்மா, மாமா, மனைவி எனக் குடும்பத்திலும் சரமாரியாகத் திட்டுகிறார்களாம். `உன் வேலையை மட்டும் பார்' எனச் சொல்லி காய்ச்சி விட்டார்களாம்.

• ‘கபடி’ இயக்குநர், அடுத்து இயக்கும் ‘கபடி பார்ட் 2’  படத்துக்கு ‘அட்டகத்தி’யை நாயகியாக ஒப்பந்தம் செய்தாராம். ஒரு படத்தில் அவர் குழந்தைக்கு அம்மாவாக நடித்ததை அறிந்து ஏனோ அவரை நீக்கி விட்டாராம்!