உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

பேஸ்புக்கில் `சும்மானாச்சிக்கி' என்று  ஒரு பக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள், இந்தக் கோவை இளைஞர்கள். பெயர்தான் `சும்மானாச்சிக்கி'... உள்ளே ஹியூமரும், சமூகப் பிரச்னையும் கலந்துகட்டி அடிக்கிறார்கள். சமீபத்தில் `சிங்கம்-3' டீஸரையும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போன விஷயத்தையும் மிக்ஸ் செய்து, இவர்கள் எடுத்த ஒரு ஸ்பூஃப் வீடியோதான் தற்போது ஃபேஸ்புக்கின் வைரல்!

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

``நாங்க எல்லோருமே சினிமா கிளப் மூலமா அறிமுகமான  நண்பர்கள். எல்லோரும் மீடியாலதான் வேற வேற டிபார்ட்மென்ட்ல இருக்கோம். ராஜேஷ், பிரசன்னா, சவீதான்னு எல்லோருமே கோயம்புத்தூர்தான். நான் நலன்குமாரசாமிகிட்ட உதவி இயக்குநரா இருக்கேன். இந்த மாதிரி வீடியோக்கள் எல்லாம் பண்ணணும்னு ரொம்ப நாளாவே ஐடியா இருந்துச்சு, ஆனா அதுக்கான சரியான நேரம் இப்போதான் அமைஞ்சிருக்கு. ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொல்லவும் ஒரே ராத்திரில எவ்வளவு கஷ்டங்களை எல்லாரும் அனுபவிச்சாங்கன்னு கண்கூடா சில விஷயங்களைப் பார்த்தோம். அப்போதான் வீடியோவா எடுத்துப் பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். ஆரம்பத்துல ஒரு வீடியோ போட்டோம். அதுக்கு நல்ல ரீச் இருந்துச்சு. ஆனாலும் ஸ்கிரிப்ட் சைடுல எங்களுக்கு திருப்தி வரலை. அப்படித் திரும்ப மூணாவது தடவை வொர்க்  பண்ணுன வீடியோதான் இந்த `கொலைப்பசில இருக்கேன்' வீடியோ. அடுத்தடுத்த வீடியோக்களை எல்லாம், டெக்னிக்கலா இன்னும் பெட்டரா பண்றதுக்கான வேலைகள்ல இருக்கோம்'' என இந்த டீமின் கிரியேட்டிவ் ஹெட் சிவா சொல்லும்போதே, செல்லா இடைமறிக்கிறார்.

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

``நான் நாளைய இயக்குநர் சீசன் நாலுல பதினைஞ்சு குறும்படங்கள் வரைக்கும் பண்ணுனேன். அப்புறம் லிவிங்ஸ்டன் சார் நடிப்புல `ஆண்ட பரம்பரை' படத்துல வொர்க் பண்ணுனேன். ராஜேஷ்தான் டைரக்டர். அப்போ இருந்து நானும் இந்த டீமுக்குள்ள வந்துட்டேன்.

``சரி பாஸ், இந்த வீடியோ மேக்கிங் பத்தி சொல்லுங்க'' என்றேன்.

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”


``ஸ்பாட்டுக்குப் போய்தான் டயலாக்கே எழுதுவோம். ஹோட்டல் சீன் ஒண்ணு இருக்கும். நிறைய சாப்பிட்டுட்டு 2000 ரூபாய் நோட்டு நீட்டுற சீன். அட நிஜமாவே பிரச்னைதான் போலன்னு ஹோட்டல்ல எங்களைச் சுத்தி ஒரே கூட்டம். அப்புறமாதான் ஷூட்டிங்னு தெரிஞ்சு தலையில அடிச்சுக்கிட்டுப் போனாங்க. அந்த அளவுக்கு ரியல் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருக்கோம்!'' என செல்லா முடிக்க, ``ஓ... சாருக்கு ஆஸ்கார் ஒண்ணு கொடுத்திருவோமா...'' என செல்லாவைக் கலாய்க்கிறார் பிரசன்னா.

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

``ஒரு நாள் தான் ஷூட் பண்ணினோம். ஐயாயிரம் வரைக்கும் செலவாச்சு. `பாய்ஸ்' படத்துல சித்தார்த் டீமுக்கு விவேக் சார் எப்படியோ, அப்படித்தான் எங்க டீமோட மேனேஜர் சவீதாவும். ஐடியாவுக்கு உயிர் கொடுக்க செலவு பண்றதெல்லாமே சவீதாதான். ஏம்மா எங்க மேல அவ்வளவு நம்பிக்கையா" எனப் பிரசன்னா கேட்க, டரியல் ஆகிறார் சவீதா.

“சும்மானாச்சிக்கு கலாய்க்கிறோம்!”

``அடுத்து என்ன பாஸ் பண்ணப் போறீங்க...''

``சமூகப் பிரச்னைகளை நல்ல தரமான கதையமைப்பும், டெக்னிக்கலாகவும் தொடர்ந்து சொல்லணும்ங்கிற ஐடியா இருக்கு. இனிமே வாரா வாரம் அது சம்பந்தமான வீடியோ அப்லோடு ஆகும். அதே நேரத்துல நல்ல சினிமா எடுப்பதற்கான வேலைகளும் இருக்கும்'' என்றவரிடம், ``வாழ்த்துகள்'' சொல்லித் திரும்பினால்... ``சரி... டைம்பாஸ்ல பேட்டி வரப்போகுது. ட்ரீட் எப்போ'' என எல்லோரும் சவீதாவைச் சூழ்ந்துகொள்கிறார்கள். ``உங்களுக்கு ட்ரீட் வைக்கிற காசுக்கு, ஷங்கர் சார் படத்துல ஒரு பாட்டையே ஷூட் பண்ணலாம்!'' என எஸ்கேப் ஆகிறார், சவீதா.

சும்மா புகுந்து விளையாடுங்க பசங்களா!

- ந.புஹாரிராஜா