உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

``கால் மேல கால் போடுறது அடையாளம்!''

``கால் மேல கால் போடுறது அடையாளம்!''
பிரீமியம் ஸ்டோரி
News
``கால் மேல கால் போடுறது அடையாளம்!''

``கால் மேல கால் போடுறது அடையாளம்!''

கோலிவுட்ல விமர்சனம் பண்ற ட்ரெண்ட் எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே வாராவாரம் ரிலீஸ் ஆகிற எல்லாப் படங்களுக்கும் கவுன்ட்டவுன் சொல்ற வழக்கத்தைக் கொண்டுவந்தது டாப் டென் மூவிஸ்தான். ரொம்ப காலமா சன் டி.வில ஒரு வாரம்கூட தவறாமல் வந்துக்கிட்டு இருக்கிற இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்  சுரேஷ்குமாரிடம் ஒரு  பேட்டி...

‘`முதல் டி.வி ஷோ எப்போ?’’

‘`என்னோட முதல் ஷோ தூர்தர்ஷன்ல தான். 1996- ல தூர்தர்ஷன்ல ஷோ பண்ணினேன். அதுக்கு அப்பறம் சன் டி.வி வந்து டாப் டென் மூவிஸ் பண்ணது 1998-ல்!’’

‘`மீடியா வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?’’

‘`தூர்தர்ஷனுக்கு அப்ளை பண்ணது 1993-ல். ஆங்கரிங் பண்ணலாம்னு கார்டு எழுதிப் போட்டேன். மூணு வருஷம் கழிச்சு 1996-ல், `இன்டர்வியூ இருக்கு, வர முடியுமா?'னு கூப்பிட்டாங்க. நம்பிக்கையே இல்லாமப் போனேன். கிட்டதட்ட 3000 பேர் இருந்தாங்க. அட்டெண்ட் பண்ணினேன். ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் டார்க் கலர்ல சட்டை போட்டுக்கிட்டு வீடியோ ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க. என்கிட்ட டார்க் கலர்ல சட்டையே இல்லை. ஒரேயொரு கருப்புச் சட்டை இருந்தது. கேமரா முன்னாடி பேசச் சொன்னாங்க. ஒரு வாரம் கழிச்சு `யு ஆர் செலக்டட்`னு சொன்னாங்க.’’

``கால் மேல கால் போடுறது அடையாளம்!''

‘`டாப் டென்ல இதுவரைக்கும் எத்தனை எபிசோட் பண்ணி இருப்பீங்க?’’

‘`இதுவரைக்கும் 960 ப்ளஸ் எபிசோட் பண்ணிருக்கோம். அடுத்த வருஷம் நவம்பர்ல ஆயிரமாவது எபிசோட் பண்ணிடுவோம்.’’

‘`டாப் டென்ல மறக்க முடியாத எபிசோட்?’’


‘` நிறைய இருக்கு.. முக்கியமா நடிகர் ஜெய்சங்கர் இறந்தபோது பண்ணுன எபிசோட் மறக்கவே மாட்டேன். எப்பவும் கால் மேல கால் போட்டுதான் பேசுவேன். அதுதான் அடையாளம்! ஆனா, அந்த எபிசோட் மட்டும் கால் மேல கால் போடாம பேசினேன். இன்னொரு விஷயம் 2002 ஜூன்ல அப்பா இறந்துட்டாங்க, அவங்க இறந்து மூணாவது நாள் மீசை இல்லாம ஷூட் போனேன். அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு.’’

‘`ஷோ பார்த்துட்டு யாரெல்லாம் கமென்ட் பண்ணி இருக்காங்க...?’’

‘`பி.வாசு, லிங்குசாமினு கோலிவுட்ல நிறையப் பேர் பாராட்டி இருக்காங்க. டைரக்டர் ஷங்கர் சாரை இன்டர்வியூக்காக பார்க்கப் போயிருந்தப்போ ரொம்ப நேரம் என் ஷோ பற்றி, பேசிக்கிட்டு இருந்தார். ஒருநாள் ‘மாயி’ படத்துக்காக சரத்குமார் சார் வீட்டுக்குப் பேட்டி எடுக்கப் போனேன். அப்போ அவர், `நான் எங்கே ஷூட்டிங் போனாலும் ஏன் அவுட்டோர் சூட்டிங்ல இருந்தாலும்கூட பார்க்கிற ஒரே ஷோ உங்க புரோகிராம்தான்’னு சொன்னாரு.’’

‘`யாராவது ஷோ பார்த்துட்டு, `ஏன் முதல் இடம் கொடுக்கலைங்கிற` மாதிரிக் கோபமா பேசி இருக்காங்களா...?’’

‘` தொடக்கத்துல டாப் டென் நிகழ்ச்சியை நான் பண்ணலை. வேற ஒருத்தர் பண்ணிட்டு இருந்தார். அவர் கிட்டதட்ட 100 எபிசோட் பண்ணி இருப்பார். ஒரு பிரச்னை வந்ததாலதான் என்னை ஷோ பண்ணக் கூப்பிட்டாங்க. நான் வந்த பிறகு பேட்டர்ன் மாத்தினோம். எந்தப் படத்தைப் பற்றியும் நெகடிவ்வா பேசாம, இன்னும் நல்லா இருந்திருக்கலாம் அப்படின்னு பாசிடிவாதான் சொல்வேன். இருந்தும் ‘தெனாலி’ படம் வந்தப்போ `தெனாலி கோமாளி'னு சொன்னதால சன் டி.வி-க்கும் அந்தப் படம் ரைட்ஸ் வெச்சு இருந்த இன்னொரு டி.விக்கும் ஒரு போரே நடந்தது.''

‘`படம் பார்க்குற பழக்கம்லாம் இருக்கா...?’’


‘` எல்லாப் படமும் பார்ப்பேன். முக்கியமா முதல் ஐந்து இடத்துக்குள் வர்ற படத்துக்கு எப்பவும் நான் பார்த்துட்டுதான் ரிவ்யூ மாதிரி எழுதுவேன். அதான் எனக்கு திருப்தி. அதுல நானே பார்த்துட்டு ரொம்ப ஆசைப்பட்டு கவிதை நடையில் எழுதினது `ஆட்டோகிராஃப்' படத்துக்குதான்.’’

‘`இப்போ இருக்கிற ரிவ்யூ பண்ற ட்ரெண்டை எப்படிப் பார்க்குறீங்க..?’’

‘`ரிவ்யூங்கிறது கண்ணாடியில் முகம் பார்க்கிற மாதிரி. கண்ணாடியில் முகம் கருகித் தெரிஞ்சா கண்ணாடியை உடைக்கக் கூடாது. முகத்துல உள்ள கரியைத்தான் துடைக்கணும். அந்தப் பக்குவம் எல்லோருக்கும் வரணும். ப்ளஸ் மட்டும் சொல்லணும்னு எதிர்பார்த்தா, அது விமர்சனம் இல்லை. விளம்பரம்.’’

‘`சினிமா வாய்ப்பு வருதா...?’’

‘`அதெல்லாம் நிறைய வருது. சிலது அவாய்ட் பண்ணியிருக்கேன். சில படத்துல லைட்டா தலைகாட்டி இருக்கேன். இப்போகூட ‘காஷ்மோரா’ல நடிச்சிருந்தேன். ஆஃப் ஸ்கிரீன் வொர்க் நிறையப் பண்ணிருக்கேன். இனி ஃபுல் ஃபார்ம்ல சீக்கிரமே பண்ணலாம்னு இருக்கேன்.’’

‘` எப்பவும் இளமையாவே இருக்கீங்களே எப்படி...?’’


‘` எப்பவும் எக்சர்ஸைஸ் பண்ணுவேன். கெட்டப் பழக்கம் ஏதும் இல்லை. முக்கியமா மனசு நல்லா இருந்தாலே போதும் பாஸ்..!’’

- லோ.சியாம் சுந்தர்