
தி.விக்னேஷ்
ஒரு சிறுமி புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுக்கிறாள். அதைத் திறந்ததும் புத்தகத்தில் வரும் கதாபாத்திரம், அவள் முன்னால் நிற்கிறது.

‘ஹாரிபாட்டர் கதை விடாதே’ என்கிறீர்களா? ‘சத்தியமா இல்லை. இனி, இந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்கும்’ என்கிறார் மேத்யூ ரெயின்ஹர்ட் (Matthew Reinhart).
ஸ்டார் வார்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்று பல்வேறு கார்ட்டூன் தொடர்களை பாப்-அப் புத்தகங்களாக வடிவமைத்த வித்தைக்காரர் மேத்யூ. இவரது சமீபத்திய புத்தகம், ‘Super Heroes: The Ultimate Pop-Up Book’.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருப்பது டிசி என்டர்டெய்ன்மென்ட்ஸ் (DC Entertainments). ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு சூப்பர் ஹீரோ, அவருடைய நண்பர்கள். அவர்களைப் பற்றிய அறிமுகம் என மெகா பாப்-அப்களாக விரியும் காட்சியைப் பார்க்கும்போதே 100 கேம்ஸ் ஆடிய உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
இந்த பாப்-அப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவத்தைப் பெற... https://youtube/PlDQCGUGq8Q என்ற வீடியோ லிங்கை சொடுக்குங்கள்.