
கிங் விஸ்வா, சதீஷ்







இந்தப் படக்கதையில் இன்ஸ்பெக்டர் தேவ், குற்றவாளியை எப்படிக் கண்டுபிடித்தார் என்று சொல்ல வேண்டும். அதற்காக மூன்று க்ளூக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த க்ளூக்கள் இடம்பெற்றுள்ள இடங்களில் சின்னம் இருக்கும். அந்தப் படங்களை கவனமாகப் பார்த்துச் சிந்தியுங்கள். நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் விவாதியுங்கள். மூன்று க்ளூக்களுக்கான விடைகளையும் சரியாகக் கண்டுபிடித்து ஒரு வெள்ளைத்தாளில் எழுதி, அந்தத் தாளிலேயே இங்குள்ள படத்தைக் கத்தரித்து ஒட்டுங்கள். அத்துடன், இந்த இதழ் சுட்டி விகடன் பற்றி 30 வார்த்தைகளுக்குள் விமர்சனம் எழுதி அனுப்புங்கள்.
சரியான விடைகள் மற்றும் சிறந்த விமர்சனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 20 பேருக்கு தலா ` 500 மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15.02.2017
அனுப்ப வேண்டிய முகவரி... துப்பறியும் போட்டி, சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002
ஹாய் சுட்டி ஃப்ரெண்ட்ஸ்...
15.01.17 சுட்டி விகடனில் வெளியான ‘க்ரைம் டைம் - புத்தாண்டு விருந்து’ போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பேர், சரியான விடைகளை எழுதி அனுப்பி, ‘நாங்களும் துப்பறியும் புலிகள்தான்’ என நிரூபித்துவிட்டார்கள். மிகவும் மகிழ்ச்சி. சரியான விடையுடன், சிறந்த விமர்சனங்களையும் எழுதியவர்களில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ` 500 மதிப்புள்ள பரிசு பெறுகிறார்கள்.
சரியான விடைகள் மற்றும் பரிசு பெற்றவர்களின் விவரம் அடுத்த பக்கத்தில். விரைவில் அவர்களுக்குப் பரிசுப் பொருள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த இதழ் போட்டியில் பங்குபெறுங்கள்.துப்பறிந்து பரிசு பெறுங்கள்.
ஆல் தி பெஸ்ட்!

சென்ற (31.01.2017) இதழில் வெளியான ‘க்ரைம் டைம்’ மெகா போட்டி எண்: 2-ன் விடையும், பரிசு பெறுவோர் விவரமும் அடுத்த இதழில் இடம்பெறும்.
