
எஸ்.அபிநயா, தேவனாங்குறிச்சி
பிரச்னைகளுக்கு விடை காண்பதற்காக, பலரிடம் ஆலோசனை கேட்பதுண்டு. அதுபோல, விலங்குகள் தமது பிரச்னைகளைக் கூறி, உதவி கேட்டால்...

‘‘பல்லெல்லாம் ரத்தக்கறை படிஞ்சு, வாயைத் திறந்தால் கெட்ட வாடை அடிக்குது. பல்லு விளக்காம ‘பளிச்’னு வெள்ளையா தெரியறதுக்கு ஈஸியான மெத்தட் இருந்தா எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்கப்பு!’’

‘‘தேன் எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு தெரியும். ஆனா, ஒவ்வொரு தபாவும் தேனீக்கள்கிட்டே கொட்டு வாங்கி, மாளலை. புல்லட் ப்ரூஃப் மாதிரி ‘கொடுக்கு ப்ரூஃப்’ இருந்தா, அமேசான் டாட்காமில் புக் பண்ணி அனுப்பிவைங்க புள்ளைங்களா!’’

‘‘வாக்கிங் போனா எடை குறையும்னு டாக்டர்கள் சொல்றாங்க. எவ்வளவு தூரம் நடந்தாலும் என்னால தொப்பையைக் குறைக்க முடியலை. இத்தனைக்கும் அளவுச் சாப்பாடுதான் சாப்பிடுறேன்னு உங்களுக்குத் தெரியுமே. 10 நாள்ல 10 கிலோ குறைக்கிற ஐடியா இருந்தா சொல்லுங்க ப்ரோ!''

‘‘கணக்கில் அதிக மார்க் வாங்கும் ‘மாணவாஸ்’க்கு என்னை உதாரணம் காட்டுறாங்க. ஆனா, என் உடம்புல எத்தனை கோடுகள் இருக்குன்னே எனக்கு எண்ணத் தெரியாது. ‘மாணவப் புலி' யாராவது எனக்குக் கூட்டல் சொல்லித் தந்து ஹெல்ப் பண்ணுங்கப்பா!"

‘‘யார் யாரையோ உச்சத்துக்குக் கொண்டுபோகும் நம்ம தமிழ் இசையமைப்பாளர்கள், பிறவிப் பாடகனான எனக்கு வாய்ப்புக் கொடுத்தா, ஒரு ஆஸ்கர் அவார்டு வாங்கித் தருவேன்!’’

‘‘முதுகு மேலேயே சொந்த வீடு இருந்தாலும் சுகம் இல்லே. மராமத்து செஞ்சு, செகண்ட் ஃப்ளோர் கட்டி, கலர்கலரா வர்ணம் பூசணும்னு ஆசை. செய்கூலி, சேதாரம் இல்லாம என் ஆசை நிறைவேற ஹெல்ப் பண்ணுங்க செல்லங்களா!’’

‘வாசல்ல போட்ட கோலம் மாதிரி உடம்பில் புள்ளிகள் அழகா இருந்தாலும், தலை மேலே காய்ஞ்ச மரத்துக் கிளைகள் மாதிரி கொம்புகள் அங்கிட்டும் இங்கிட்டும் போகுது. சாணை பிடிச்ச கத்தி போல, என் கொம்புகளின் ஷேப்பை மாத்த யோசனை சொல்லுங்க குட்டீஸ்!’’

‘‘சீப்பால தலைவாரி, கூலிங்கிளாஸ் போட்டுட்டு லுக் விடலாம்னு நினைச்சா, எல்லாச் சீப்புக்குமே பல்லு உடைஞ்சிடுது. என்னோட ஹேர்ஸ்டைல் சேஞ்ச் பண்ண, மாற்று யோசனை இருந்தா டெமோ காட்டுங்க ரெமோஸ்!’’

‘‘வெயில், மழை, பனிக்காலம்னு கிளைமேட் மாறினாலும், சட்டை உரிக்கிற பிரச்னை மட்டும் எனக்கு மாறவே மாட்டேங்குது. சட்டையைக் கழட்டுறதுக்குள்ள பேஜாராயிடுது. நிரந்தர சட்டைக்கு வழி இருக்கா பாய்ஸ்?’’

``நாலு நாள் வாழ்ந்தாலும் வீரனா வாழணும்ங்கிறது தமிழனின் கோட்பாடு. ஆனா, என் வாழ்க்கை அப்படியில்லை. யாரைக் கண்டாலும் ஓடும் பிறப்பா இருக்கேன். மாவீரன் அலெக்சாண்டர், வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி வாழ, டிப்ஸ் ப்ளீஸ்!’’