Published:Updated:

நதிகளைப் பாதுகாக்க உத்ரகாண்டில் ராஃப்டிங் விளையாட்டுக்குத் தடை!

நதிகளைப் பாதுகாக்க உத்ரகாண்டில் ராஃப்டிங் விளையாட்டுக்குத் தடை!

நதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ராஃப்டிங், பாராகிளைடிங் விளையாட்டுகளுக்கு உத்ரகாண்டில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

நதிகளைப் பாதுகாக்க உத்ரகாண்டில் ராஃப்டிங் விளையாட்டுக்குத் தடை!

நதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ராஃப்டிங், பாராகிளைடிங் விளையாட்டுகளுக்கு உத்ரகாண்டில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

நதிகளைப் பாதுகாக்க உத்ரகாண்டில் ராஃப்டிங் விளையாட்டுக்குத் தடை!

த்ரகாண்ட் மாநிலம், பராக்ளைடிங், ராஃப்டிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்கு பெயர்போனது. இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்த மாநிலத்தில், யமுனா, சராயு, காளி, கங்கா, கோரி கங்கா, கோஷி, ராம்கங்கா போன்ற சிறிதும் பெரிதுமான நதிகள் ஓடுகின்றன. ஒவ்வொரு நதியிலும் சுமார் 20 முதல் 40  கிலோமீட்டர் வரை ராஃப்டிங் செல்வதற்கு ஏற்ற வகையில் நீரோட்டம் அமைந்திருக்கும். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் `அட்வெஞ்சர்' பயணம் மேற்கொள்ள உத்ரகாண்ட் வருகிறார்கள்.

இங்கு உள்ள ரிஷிகேஷ் நகரம், நீர் விளையாட்டுகளுக்குப் பெயர்போனது. ஆயிரக்கணக்கான சுற்றுலா நிறுவனங்களும் இதன் மூலம் கொள்ளை லாபமும் ஈட்டிவந்தன. உத்ரகாண்டில் White water rafting மேற்கொள்ளவே சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம்காட்டுகிறார்கள். ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வரை பணம் புழங்கும் நீர் விளையாட்டு White water rafting. கைடுகள், சமையல்காரர்கள், வழிகாட்டிகள், ஓட்டுநர்கள் என 5,000 முதல் 7,000 பேர் வரை வேலைவாய்ப்பும் பெற்றுவந்தனர். 

நதிகளில் நீர் விளையாட்டுகளை மேற்கொள்வதற்காக உத்ரகாண்ட் அரசு எந்த விதிமுறையும் வகுக்கவில்லை. ரிஷிகேஷைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹரி ஓம் காஷ்யப் என்பவர், நீர் விளையாட்டுகளுக்குத் தடைவிதிக்கக் கோரி உத்ரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன் மனுவில் `உத்ரகாண்டில் நீர் விளையாட்டுகளை மேற்கொள்ள, எந்த விதிமுறையையும் அரசு வகுக்கவில்லை. தனியார் நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி கங்கை போன்ற நதிகளில் சுற்றுலாப் பயணிகளை ராஃப்டிங் அழைத்துச் செல்கின்றன. இதனால், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவதோடு, ஆற்றுப்படுக்கையும் நாசமாகிறது. எனவே, உத்ரகாண்டில் அனைத்து நதிகளிலும் நீர் விளையாட்டுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கு, நீதிபதிகள் ராஜீவ் சர்மா, லோக்பால் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உத்ரகாண்டில் அனைத்து நீர் விளையாட்டுகளுக்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், `அட்வெஞ்சர் விளையாட்டுகள், நீர் விளையாட்டுகளை மேற்கொள்வதற்கு, முறையான சட்டத்தை உருவாக்க  வேண்டும். இது தொடர்பான வெளிப்படையான கொள்கையை உத்ரகாண்ட் அரசு இரு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். அதுவரை, உத்ரகாண்டில் எந்த நீர் விளையாட்டும் மேற்கொள்ள அனுமதியில்லை' என்று தீர்ப்பில் கூறியுள்ளனர். 

ராஃப்டிங் மேற்கொள்ளும்போது ஏற்படும் உயிர்பலிகளையும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். `உத்ரகாண்ட் மாநிலத்துக்கு சுற்றுலாத் தொழில் மிக அவசியமானதுதான். அதேவேளையில், முறையான விதிமுறைகள் உருவாக்கப்படுவதும் அவசியமே! தரமான அனுபவமிக்க பயிற்சியாளர்களைக் கொண்டும் ராஃப்டிங் நீர் விளையாட்டு மூலம் ஏற்படும் உயிர்ப்பலிகளைத் தடுக்க முடியவில்லை. மக்களின் சந்தோஷம் சில சமயங்களில் துயரத்தில் முடிகிறது. சுற்றுச்சூழலையும் ஆற்றுப்படுக்கைகளையும் மாசுபடுத்துவதையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது' என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

உத்ரகாண்டில் நீர் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா நிறுவனங்களுக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. இந்திய தொழில்முறை அட்வெஞ்சர் விளையாட்டு கழகத் தலைவர் கிரண் தொடரியா, ``உத்ரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்த மாநில சுற்றுலாத் தொழிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது'' என்று குற்றம் சாட்டியுள்ளார். ``கங்கை நதியில் மட்டும் 36 கி.மீ தொலைவுக்கு ராஃப்டிங் மேற்கொள்ள முடியும் இதற்காக அனுபவமிக்க 300 ராஃப்டர்கள் இங்கே உள்ளனர். 10,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீர் விளையாட்டுகளால் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நீதிமன்றம் விதித்துள்ள தடையால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது'' என்றும் கிரண் வேதனைப்படுகிறார். 

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு கங்கை நதியில் கௌடில்யாவிலிருந்து ரிஷிகேஷ் வரை ராஃப்டிங் மேற்கொள்ள, தேசியப் பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்திருந்தது. அதையும் மீறி சில நிறுவனங்கள் ராஃப்டிங் மேற்கொண்டுவந்த நிலையில்தான், உத்தரகாண்ட் நீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.