மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கார்த்திகைப் பாண்டியன்

“மனித வாழ்வின் இருப்பு குறித்த விசாரணைதான் எனது கதைகள். நடமாடும் கண்ணாடிகளைப் போன்றவர்கள் மனிதர்கள். எந்த நேரத்திலும் துகள்துகளாய் நொறுங்கிப்போகும் சாத்தியங்கள் சூழ்ந்திருக்க, வாழ்க்கை எனும் பயணம் எதை நோக்கி நீள்கிறது என்ற கேள்வியை நீட்டித்து எழுதிப் பார்க்கிறேன். ஆடியில் முழுதாய்த் தெரியும் பிம்பத்தைக் காட்டிலும் உடைந்த சில்லுகள் காட்டும் எண்ணற்ற பிம்பங்களின் வித்தியாசமானக் கோணங்களில் தொலைந்துபோவதையே விரும்புகிறேன்.”

மதுரையைப் பூர்வீகமாகக்கொண்ட கார்த்திகைப் பாண்டியன், திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். சிறுகதைகள் எழுதுவதோடு மொழிபெயர்ப்புத் தளத்தில் தீவிரமாக இயங்கும் இவர், அதிகம் அறியப்படாத பிறமொழி எழுத்தாளர்களின் பல சிறுகதைகளையும் ஒரு நாவலையும் மொழிபெயர்த்திருக்கிறார். `எருது’, `சுல்தானின் பீரங்கி’, `ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ ஆகியவை இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புக்கான 2015-ம் ஆண்டின் ஆனந்த விகடன் விருதை ‘எருது’ தொகுப்புக்காகப் பெற்றார். 

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கே.வி.ஜெயஸ்ரீ

“தன் தனிமைத் துயரைத் துடைத்தெறிய என் அம்மா கண்டெடுத்த வாசிப்பெனும் மாமருந்து, என் பால்யத்தின் நோய்மைகளிலிருந்து என்னையும் குணப்படுத்தும் களிம்பானது. என் தாய்மொழியான மலையாளத்தின் சிறந்த இலக்கிய வளமையைக் கொண்டுவந்து தமிழ் இலக்கியத்துக்குப் பரிமாறும் மொழிபெயர்ப்புப் பணியைக் கண்டடைந்தேன். எழுத்தும் வாசிப்பும் இணைந்திருக்கும் வாழ்வில் இன்னும் பெருவாரியான மானுட அனுபவங்களைத் தனதாக்கிக்கொள்ளும் பேரன்போடு காத்திருக்கிறேன்...”

கேரளாவின் பாலக்காட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கே.வி.ஜெயஸ்ரீ, தற்போது திருவண்ணாமலை மாவட்டம் கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர். கேரளக் கவிஞர் சியாமளா சசிகுமாரின் கவிதைகளை, `நிசப்தம்’ என்ற தொகுப்பாகவும், ஏ.அய்யப்பனின் கவிதைகளை `வார்த்தைகள் கிடைக்காத தீவில்’ என்ற தொகுப்பாகவும் மொழி பெயர்த்திருக்கிறார். இவைதவிர, ‘ஒற்றைக் கதவு’, `நிலம் பூத்து மலர்ந்த நாள்’, உள்பட புகழ்பெற்ற பல மலையாளப் படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது, ஜான் ஆபிரகாமின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளையும், டி.வி.கொச்சுபாவாவின் குறுநாவல்களையும் மொழிபெயர்த்து வருகிறார்.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ரோஸ் ஆன்றா

‘‘தமிழின் ஆணிவேர் விரிந்தோடிய ஆதிக்குமரியின் காற்றை சுவாசித்ததன் விளைவில் பிறந்தவையே என் கவிதைகள். புலமையற்ற எளிய மனிதனின் தனிப்பட்ட மரபு மொழிக்கட்டாகவே என் கவிதைகளை நான் வடிவமைத்துக்கொண்டிருக்கிறேன். பலருக்கு அது பொருளற்றக் குரலாகக் கேட்கலாம். சிலர் அதில் உள்ளமிழ்ந்து காணக்கிடைக்காத உன்னதத்தையும் உணரலாம். என் கவிதைகள் காலம் கடந்து என் மூதாதையின் சுவாச மிச்சத்தை கடத்தி வாழும் என்று தீர்க்கமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் எனக்கான உயிர்ப்பு.”

குமரி மாவட்டம், மாடத்தட்டுவிளையைச் சேர்ந்த ரோஸ் ஆன்றா, தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரப் பழுது நீக்குநர். அவரது முதல் கவிதைத் தொகுப்பான `நிலமெங்கும் வார்த்தைகள்’, நவீன கவிதை வெளியில் கவனத்துக்குள்ளானது. தமிழின் 11 முக்கிய ஆளுமைகளின் கவிதைகளைத் தொகுத்து `ஈனில்’ என்ற பெயரில் நூலாக்கி இருக்கிறார். விரைவில் இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவர இருக்கிறது.

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

கா.உதயசங்கர்

“தீராத வாசிப்பின் வழியாக எழுத்து எனும் பிரபஞ்ச வெளியில் ஒரு சிற்றெறும்பாய்

எழுத்துக்கு அப்பால்! - வெ.நீலகண்டன்

ஊர்ந்துகொண்டிருப்பவன் நான். கரிசல் இலக்கியப் பாரம்பர்யத்தின் மூன்றாவது தலைமுறை எழுத்தாளன். நடுஇரவில் பூச்சிகளின் ரீங்காரத்திலும் தப்பிப் பிழைத்த ஒற்றைப் பறவையின் நிராதரவான குரலிலும், ஒற்றை ரயிலின் ஓசையிலும் என்னுடைய படைப்பின் இழைகளை நூற்றுக்கொண்டிருக்கிறேன். கு.அழகிரிசாமியையும், கி.ராவையும் இன்னபிற கரிசல் எழுத்தாளர்களையும் சுமந்து திரியும் காலத்தின் மேனியில் என் எழுத்தாணிக் கிறுக்கல்களும் இடம்பெற வேண்டும் என்பதே என் பேராவல்.”

கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், அபுனைவு, மருத்துவம் எனப் பல தளங்களில் தீவிரமாக எழுதிவரும் உதயசங்கர், குமாரபுரம் ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரி (ஸ்டேஷன் மாஸ்டர்). ‘யாவர் வீட்டிலும்’, `நீலக்கனவு’, `மறதியின் புதைசேறு’ உள்ளிட்ட சிறுகதை நூல்கள், `ஒரு கணமேனும்’, `தீராத பாடல்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள், `தலையாட்டிப் பொம்மை’, `மாயக்கண்ணாடி’ உள்ளிட்ட குழந்தை இலக்கியங்கள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ‘மாயக்கண்ணாடி’ நூலுக்காக 2016-ம் ஆண்டின் (சிறந்த சிறார் இலக்கியம்)ஆனந்த விகடன் விருது பெற்றார்.