மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியங்கள்: ராமமூர்த்தி

பேனா - பென்சில் டெக்னிக்! 

அனுபவங்கள் பேசுகின்றன!

றவினர்கள், நண்பர்களின் டெலிபோன் எண்களை நம்மில் பலரும் டைரியில் குறித்து வைத்துக்கொள்வோம். சில காரணங்களால் சிலருடைய எண்கள், குறிப்பாக செல்போன் வைத்திருப்பவர்களின் எண்கள் மாறுகின்றன. அவற்றை அடித்து அடித்து எழுதும்போது  தெளிவில்லாமல் ஆகிவிடுகின்றன. இதைத் தவிர்க்க சம்பந்தப்பட்டவர்களின் பெயரை பேனாவாலும், அவர்களின் டெலிபோன் எண்ணை பென்சிலாலும் எழுதி வைத்துக்கொண்டால், எண்கள் மாறும்போது எண்களை மட்டும் ரப்பரால் அழித்து மாற்றி எழுதிக்கொள்ளலாம்; டைரி `நீட்’டாக இருக்கும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், நாட்டரசன் கோட்டை-56

வாடிக்கையாளரை வேதனையில் தள்ளாதீர்! 

அனுபவங்கள் பேசுகின்றன!

நான் அரசுடைமை வங்கி ஒன்றில் பணம் எடுக்கச் சென்றேன். வங்கியில் பணம் வழங்கியவர், பணம் எடுக்க எழுதி வரும் தாளில் சிறிய தவறு இருந்தாலும், வாடிக்கையாளர்களிடம்  நாகரிகமற்ற முறையில் பேசினார். மேலும், அவர்கள் தவற்றைத் திருத்திவிட்டு மீண்டும் வரிசையின் கடைசிக்குச் செல்ல வேண்டும். திரும்பவும் அந்த கவுன்ட்டரை இதனால் அடைய  நீண்ட நேரம் கால் கடுக்க நிற்க நேர்கிறது. தேதி போன்ற சிறிய தவற்றை கவுன்ட்டரில் இருப்பவரே திருத்திக்கொள்ளலாமே..! இப்படியா வாடிக்கையாளர்களை நடத்துவது?!

இவரைப்போன்ற வங்கிப் பணியாளர்களுக்குப் பொது மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் பயிற்சி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்!

- கே.செந்தில்வடிவு, வேலூர்-2

`ஆஹா’ அப்ரோச்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ண்மையில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந் தேன். அவள் கணவர் அஞ்சல் துறையில் பணிபுரிகிறார். ஒரே மகள். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். நான் சென்ற சமயத்தில் என்னுடைய தோழி மட்டும் வீட்டில் இருந்தாள். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது தோழியின் மகள் இரண்டு கைப்பைகளுடன் வந்தாள். ``அம்மா... பாட்டி வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்க. பாட்டி உனக்குப் பலகாரம் கொடுத்து அனுப்பியிருக்காங்க...” என்று சொல்லி, கைப்பைகளைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

“மகளை உன் அம்மா வீட்டுக்குத் தனியாகவா அனுப்பினாய்?” என்று நான் கேட்க... என் தோழி, ``என் மகள் இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். விரைவில் உயர் வகுப்புகளுக்கு வந்துவிடுவாள். அப்போது நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் போன்றவற்றை எழுத பல இடங்களுக்குச் சென்று தங்க வேண்டி இருக்கும். எப்போதும் பெற்றோர்கள் உடன் இருப்பது என்பது நடை முறைச் சாத்தியம் இல்லை. அந்தச் சமயத்தில் அவளுக்கு தடுமாற்றம், பயம் இருக்கக் கூடாது என்பதற்காக எங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர்கள் இருக்கும் வீடுகளுக்கு அவளை ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் தனியாக அனுப்பிப் பயிற்சி கொடுக்கிறேன்’’ என்றாள்.

என் தோழியின் அணுகுமுறை சூப்பர்தானே..!

- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி-4

டிக்கெட் வாங்கியும் அபராதம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

நான் ஆபீஸ் செல்வதற்காக, பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் அதிகமாக இருந்தது. டிக்கெட் வாங்கி ஹேண்ட்பேகில் போட்டேன். ஓர் இடத்தில் வண்டி நின்றபோது, டிக்கெட் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறினார். என்னிடம் டிக்கெட் கேட்டபோது, நான் ஹேண்ட்பேகை துழாவிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. ``டிக்கெட் வாங்கினேன் சார்! பேகில் போட்டேன்; இப்ப காணோம்’’ என்றேன். அவர் அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி, ரசீதைக் கிழித்துக் கையில் கொடுத்துவிட்டார். என்னிடம் அபராதத் தொகையை வாங்கிக்கொண்டார். ஆபீஸ் சென்றதும், ஹேண்ட்பேகை தலைகீழாக டேபிளில் கவிழ்த்தேன். வாங்கின டிக்கெட் அடியில் இருந்தது. ஹேண்ட் பேகில் எதை எதையோ போடுவதால், அவசரத்தில் தேடுகிறயபோது டிக்கெட்டைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. டிக்கெட் வாங்கியும், அபராதம் செலுத்தும்படி ஆகிவிட்டது.

தோழிகளே! டிக்கெட் வாங்கினால், அதைத் தனியாக மணிபர்ஸிலோ, அல்லது கையில் கட்டியிருக்கும் வாட்ச் அடியில் மடித்து வைத்தோ பத்திரப்படுத்தவும். பேகில் போட்டுவிட்டுத் தேட வேண்டாமே!

- ஆர்.சகுந்தலா, சென்னை-33