
ஓவியங்கள்: ஸ்யாம்
ட்ரீட்மெண்ட்
``கண் வலின்னு பையன் அழுறான்...'' என்றவரிடம்,
``காலைல 50MB, மதியம் 50MB, நைட்டு 50MB மட்டும் மொபைல பார்க்கச் சொல்லுங்க... சரியாயிடும்'' என்றார், டாக்டர்.
- சி.சாமிநாதன்
லாஸ்ட் ஸீன்
``கடைசியா எப்ப பார்த்தீங்க?'' என விசாரித்த போலீஸ்காரரிடம் வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீனைக் காட்டினார் பக்கத்து வீட்டுக்காரர்.
- கிருஷ்ணகுமார்
காதல்
``நம்ம பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு எப்படி சொல்ற!''
``நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்!''
- கி.ரவிக்குமார்

கதை
``சும்மாச் சும்மா கதை கேட்டு நச்சரிக்கக் கூடாது. பாட்டியை சீரியல் பார்க்கவிடு...'' என்றாள் அம்மா!
- பெ.பாண்டியன்
என் ஆளு
அவள் என் ஆளு என்பதில் ஆரம்பித்து நீங்க என்ன `ஆளு?' என்பதில் முடித்துவைக்கப்பட்டது கதிர்-மீராவின் காதல்.
- அபி
கோபம்
குடிகாரக் கணவனிடம் அடிவாங்கும் மனைவிகள் திருப்பி அடிக்கின்றனர் டாஸ்மாக் கடைகளை!
- பழ.அசோக்குமார்
அவசரம்
``வேலைக்கு மத்தில போன் எடுத்து பேசினா உசிரா போயிடும்?''
- 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கத்தினாள் மனைவி.
- நந்த குமார்
குடிநீர்
``குடிநீருக்காகச் சாலை மறியல் பண்ணிய பொதுமக்களிடம் மறியலை கைவிடுங்கள்... உடனே தண்ணீர் வண்டி அனுப்புறேன் குடம் பத்து ரூபாய்தான்'' என்றார் தலைவர்!
- வேம்பார் மு.க.இப்ராஹிம்
உறுதி செய்தல்
`ஓவர் மேக்கப்' என்று நண்பிகள் சொன்னதை நம்பாமல் ஒரு செல்ஃபி எடுத்துப்பார்த்துக்கொண்டாள் நர்மதா.
- விகடபாரதி
நடிப்பு
டிவியில் பார்க்கும்போதுதான், `இன்னும் கொஞ்சம் நல்லா அழுதிருக்கலாம்' எனத் தோன்றியது, சீரியல் நடிகை சுமத்ராவுக்கு!
- சி.சாமிநாதன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ.500. உங்கள் கதைகளை 10seconds tory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!