மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியங்கள்: ராமமூர்த்தி

பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்!

அனுபவங்கள் பேசுகின்றன!

சென்ற ஆண்டு என் தோழியின் மகள் ப்ளஸ் டூ எழுதியிருந்தாள். மார்க் குறைவாக எடுத்ததால் என் தோழி அவளைத் திட்டியிருக்கிறாள். உடனே அவள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். சரியான நேரத்தில் பார்த்ததால், அவளைக் காப்பாற்றிவிட்டனர்.

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் இது. பெற்றோர்களே... உங்கள் செல்லக் குழந்தை குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலோ, தோல்வி அடைந்திருந்தாலோ உணர்ச்சிவசப்படாதீர்கள். நீங்கள் திட்டுவதாலோ, அவமானப்படுத்துவதாலோ மதிப்பெண் கூடப்போகிறதா... இல்லையே!

மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தால், அதற்குரிய படிப்பில் சேருங்கள். தோல்வி அடைந்திருந்தால், அதிக கவனம் செலுத்தி, தேர்ச்சி பெற உதவுங்கள். நீங்கள் இப்படி நடந்துகொண்டால் குழந்தைகளின் மன அழுத்தம் குறையும்; தவறான முடிவுக்குச் செல்ல மாட்டார்கள்.

- சுப்புலட்சுமி சந்திரமௌலி, மடிப்பாக்கம்

முத்தான முன்யோசனை! 

அனுபவங்கள் பேசுகின்றன!

னது தோழியும் அவள் கணவரும் மகளின் திருமணத்துக்கு அழைக்க வந்திருந்தனர். அழைப்பிதழை ஒரு புதிய எவர்சில்வர் தட்டில் வைத்துக் கொடுத்தனர். அழைப்பிதழை மட்டும் எடுத்துக்கொண்டேன். `தட்டையும் சேர்த்து எடுத்துக்கொள்’ என்றனர். அந்தத் தட்டின் மதிப்பு நூறு ரூபாய் இருக்கும். `பந்தியில் சாப்பிடும் போதுதானே அன்பளிப்புக் கொடுப்பது வழக்கம்’ என்றேன். அதற்குத் தோழி, `என் மகனின் திருமணத்தின்போது பந்தியில்தான் அன்பளிப்புக் கொடுத்தோம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு, மூன்று பேர் திருமணத்துக்கு வருவதால், அனைவருக்கும் அன்பளிப்புக் கொடுக்க வேண்டியிருந்தது. சிறுவர்களுக்கும் அன்பளிப்பு தர வேண்டும் என்று சிலர் கேட்டனர். இதனால், கடைசியில் பற்றாக்குறை ஆகிவிட்டது. இதை எல்லாம் தவிர்க்கவே அழைப்பிதழுடன் அன்பளிப்பையும் சேர்த்துத் தருகிறோம்’ என்று சொன்னாள்.

இது நல்ல ஐடியாதானே!

- என்.குர்ஷித், பணகுடி

கேட்டுச் செய்தால் கோடி இன்பம்! 

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் தங்கையின் திருமண நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்துக்கு ஒரு நாள் உணவை நாமே தயாரித்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தோம். எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து வர, முதியோர் இல்லம் சென்றோம். என் தங்கை, `உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. அதையே நாங்க சமைத்து எடுத்து வர்றோம்’ என்றாள். அதற்கு ஒரு பெரியவர், `நாங்களெல்லாம் நல்லா சாப்பிட்டவங்கம்மா. பசங்க பாத்துக்க முடியாமதான் இங்கே கொண்டுவந்து விட்டுட்டாங்க. நிறைய பேர் சாப்பாடு தர்றாங்க. ஆனா, என்ன சாப்பாடு வேணும்னு யாரும் கேட்டதில்லை. உங்களுக்கு வசதிப்பட்டா... வடை, பாயசத்துடன் நல்ல சாப்பாடு தர முடியுமா?’ என்று தயங்கியபடியே கேட்டார். `அவ்வளவுதானே... கண்டிப்பாகக் கொண்டு வருகிறோம்’ எனச் சொல்லி, அதேபோல அடுத்த நாள் சமைத்து எடுத்துப்போனோம். ஆசை ஆசையாகச் சாப்பிட்டு மனதார வாழ்த்தினர். எங்களுக்கும் திருப்தியாக இருந்தது.

தோழிகளே... உதவி செய்ய முடிவெடுத்தால், என்ன வேண்டும் என்று கேட்டுச் செய்யலாமே..!

- எஸ்.பத்மாவதி, பம்மல்

பேரீச்சம்பழம் சொன்ன பாடம்! 

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் தோழி துபாயில் வசித்து வருகிறாள். ஒருமுறை விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது `துபாயிலிருந்து வாங்கி வந்த பேரீச்சம்பழம்’ என்று கூறி நண்பர்களுக்கும் மற்ற உறவினர்களுக்கும் பேரீச்சம்பழ பாக்கெட்டுகளைக் கொடுத்தாள். எல்லோரும் துபாய் பேரீச்சம்பழம் ருசியாக இருப்பதாகவும் இந்தியாவில் கிடைக்கும் பழத்தைவிட சிறப்பாக இருப்பதாகவும் கூறினார்கள். ஒருநாள், தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது தோழியும் அவள் கணவரும் பேசிய உரையாடல் காதில் விழுந்தது...

தோழி தன் கணவரிடம் `நாம் கொடுத்த பேரீச்சம்பழம் துபாயிலிருந்து வாங்கி வந்தது என்பதை எல்லோரும் நம்பிட்டாங்க... பார்த்தீங்களா’ என்று சொல்ல... தோழியின் கணவர், `சென்னையில் வாங்கி ரீ-பேக் செஞ்சு கொடுத்தது அவங்களுக்குத் தெரியாததால் துபாய் பேரீச்சம்பழம்னு நம்பிட்டாங்க!’ எனக் கூறிச் சிரித்தார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான்... `நம்ம ஊரில் கிடைப்பதைவிட, எங்கிருந்தோ கொண்டு வந்ததுதான் சிறப்பாக இருக்கும்’ என்கிற எண்ணத்தை செட்டை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.

- புவனா சாமா, ஸ்ரீரங்கம்