மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியங்கள்: ராமமூர்த்தி

மலிவான குங்குமம்... அவஸ்தை இலவசம்!    

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் தோழியின் வளைகாப்புக்குச் சென்றிருந்தேன். விசேஷத்துக்கு வந்திருந்தவர்கள் தோழிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசினார்கள். மாலையில் அவள் முகம், கை எல்லாம் அரிப்பு ஏற்பட்டு வீங்கியது. அவளின் தாயார், `கர்ப்பமா இருக்கிறப்ப இப்படித்தான்டி கை கால் எல்லாம் வீங்கும்’ என்றார். ஆனாலும், என் தோழி ஆட்டோவில் ஏறி ஹாஸ்பிடல் சென்றாள். டாக்டர் பரிசோதித்துவிட்டு, `குங்குமம் மூலம்தான் இந்த அலர்ஜி, அரிப்பு, வீக்கம் எல்லாம் ஏற்பட்டுள்ளது. குங்குமம் தரமானதாக இல்லை’ என்றார்.

ஏகப்பட்ட செலவு செய்து திருமணம், வளைகாப்பு நடத்துகிறார்கள். குங்குமம் போன்றவற்றைத் தரமானதாகப் பார்த்து வாங்கினால் என்ன? இதில் ஏன் சிக்கனம் என்ற பெயரில் அவஸ்தையை வரவழைத்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி

பிஞ்சு வயிற்றில்  கண்டதையும் திணிக்காதீர்!   

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் நான் கடைத்தெருப் பக்கம் சென்றபோது கண்ட காட்சி, எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. படித்தவர்கள்போல தோற்றமளித்த ஒரு தம்பதி, டூவீலரில் வந்து இறங்கி, தள்ளுவண்டியில் விற்கப்படும் பானிபூரியை வாங்கி, தங்கள் குழந்தைக்கு  ஊட்டிவிட்டனர். பெரியவர்களே தெருவோரக் கடைகளில் உண்பது ஆரோக்கியத்துக்குக் கெடுதல் எனும்போது குழந்தைக்கு ஊட்டிவிடலாமா? பெரியவர்களைவிடச் சிறு குழந்தைகளுக்குக் கிருமிகள் சுலபமாகத் தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் தெருவோரக் கடைகளில் நாம் சாப்பிடும் தட்டு, ஸ்பூன் ஆகியவற்றைச் சரியாகக் கழுவக்கூட மாட்டார்கள். அதோடு, அம்மாதிரியான கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பலமுறை காய்ச்சப்படுவதாகவும் நாம் செய்திகளில் படிக்கிறோம். இப்படிப்பட்ட எண்ணெயில் செய்த பலகாரங்களைக் குழந்தைக்குக் கொடுக்கலாமா?

பெற்றோரே... குழந்தையின் ஆரோக்கியத்தை அலட்சியமாக எடுத்துக்கொண்டு, அவர்களை அவஸ்தையில் ஆழ்த்தி நீங்களும் அவதிப்படாதீர்கள். வருமுன் காப்பதுதான் உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை!

- சம்பத்குமாரி, பொன்மலை