பேட்டி-கட்டுரைகள்
கதைகள்
சினிமா
இலக்கியம்
ஆன்மிகம்
நகைச்சுவை
ரெசிப்பிஸ்

பிரீமியம் ஸ்டோரி
Newsகவிதை: இளங்கோ கிருஷ்ணன்
இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு பாதிநாள் வளர்வதும்
பாதிநாள் தேய்வதுமாய்
தன் பைத்தியத்தில்
அலைகளுக்குப்
பேய் பிடிக்கச் செய்யும்...

இந்த ஊரில் ஓர் அக்கக்கா குருவியுண்டு
அக்கூ அக்கூ எனக் கதறி
காகத்தையும் உறவு சொல்லி
ஏமாந்து புலம்பும்...
இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு
கூடடையும் பறவைக்கு
தன் சதை பறித்துக் கனி திரட்டி
யாருமற்ற நேரத்தில்
பாம்பிற்கு முட்டை தரும்...
இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு
நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில்
மலர்ந்த பூக்களின் நறுமணத்தை
கனவில் எண்ணி
நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும்!
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
பேட்டி-கட்டுரைகள்
கதைகள்
சினிமா
இலக்கியம்
ஆன்மிகம்
நகைச்சுவை
ரெசிப்பிஸ்