நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆப்பிள்... அமேசான்... ஃபேஸ்புக்... இனி ஈஸியாக வாங்கலாம்!

ஆப்பிள்... அமேசான்... ஃபேஸ்புக்...  இனி ஈஸியாக வாங்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்பிள்... அமேசான்... ஃபேஸ்புக்... இனி ஈஸியாக வாங்கலாம்!

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர், Ectra.in

ஆப்பிள்... அமேசான்... ஃபேஸ்புக்...  இனி ஈஸியாக வாங்கலாம்!

ப்பிள், அமேசான், ஃபேஸ்புக் போன்ற பங்குகளை அமெரிக்காவில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கலாம்; ஆனால், இந்தியாவில் இருந்தபடி வாங்க முடியாத நிலை இதுநாள் வரை காணப்பட்டது. இனி, நம்மூரில் இருந்தபடியே அந்தப் பங்குகளை வாங்க வழி செய்துள்ளது என்.எஸ்.இ. எப்படி இது சாத்தியம் என்று கேட்கிறீர்களா?

குஜராத்தில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டியில் (GIFT) பல்வேறு நிறுவனங்கள் எக்ஸ்சேஞ்சுகளை நடத்தி வருகின்றன. என்.எஸ்.இ, தனது துணை நிறுவனமான என்.எஸ்.இ - ஐ.எஃப்.சி.ஐ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, இங்கு சர்வதேச அளவில் செயல்படும் ஒரு எக்ஸ்சேஞ்சினைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகிவரும்   15 பங்குகளை இந்த எக்ஸ்சேஞ்சில் வாங்கலாம்; விற்கலாம்.
  
இந்த எக்ஸ்சேஞ்சில் விற்கப்படும் பங்குகளை நாமே டாலராகக் கொடுத்து வாங்கலாம். பங்குகளை விற்றால், டாலரிலேயே கணக்கு வைக்கப்படும். சர்வதேச அளவில் செயல்படும் இந்த எக்ஸ்சேஞ்சினை நடத்த செபியிடம் சிறப்பு  அனுமதி பெற்று, நடத்தி வருகிறது என்.எஸ்.இ. இவ்வாறு புதிய எக்ஸ்சேஞ்சினைத் தொடங்கி, வர்த்தகம் நடத்தி வருவதைப் பார்த்து, பி.எஸ்.இ-யும் இந்த கிஃப்ட் சிட்டியில் புதிய சர்வதேச சந்தையை நடத்தத் தொடங்கியுள்ளது.

‘அப்ப இனி எஸ்.பி.ஐ., டி.சி.எஸ் பங்குகளை வாங்குவதை விட்டுவிட்டு, ஆப்பிள், அமேசான் பங்குகளை வாங்கலாமா’’ என்று கேட்கிறீர்களா?

வாங்கலாம். ஆனால், டெரிவேட்டிவ் சந்தையில் மட்டுமே அதை வாங்கி, விற்க தற்போது அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்,  நிஃப்டி, பேங்க் நிஃப்டி உள்பட  10 இந்திய நிறுவனங்களிலும் வியாபாரம் செய்ய இந்த எக்ஸ்சேஞ்சுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ்தன் தொடர்ச்சியாக,    அமெரிக்காவில் வர்த்தகமாகும் 15 பங்குகளையும் வர்த்தகம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. ஆப்பிள்,  ஆல்பபெட், மைக்ரோசாஃப்ட், சைனா மொபைல், அமேசான்.காம், ஃபேஸ்புக், எக்ஸான் மொபைல்,  ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன், ஜெபி மார்கன் சேஷ், வெல்ஸ் ஃபார்கோ, ஜெனரல் எலெக்ட்ரிக்,  ஏடி&டி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, அலிபாபா குரூப் ஹோல்டிங், புராக்டர் அண்ட் கேம்பிள் ஆகியவையே அந்த 15 நிறுவனங்கள்.

இந்தப் பங்குகளை எல்லாம் வாங்க வேண்டும் என்கிற ஆசை நம் எல்லோருக்கும் இருந்தாலும், இவை வெளிநாட்டுப் பங்குகள் என்பதால், ரிஸ்க் அதிகம் என்பதைப் புரிந்துகொண்டு, கொஞ்ச காலத்துக்கு வேடிக்கை மட்டும் பார்ப்பது நல்லது.