மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கிரா - 95 - கி.ராஜநாராயணன்

கிரா - 95 - கி.ராஜநாராயணன்
News
கிரா - 95 - கி.ராஜநாராயணன்

செப்டம்பர் - 1922ஓவியம்: பிரேம் டாவின்ஸி

கிரா - 95 - கி.ராஜநாராயணன்

“புதுச்சேரி வாழ்க்கை?” “வழி இல்லை வேற”

“இப்போதும் பிடித்த உணவு?” “வாழைப்பழம்; இலக்கி.”

“சமீபத்தில் வாசித்தது?” “பி.எம்.சுந்தரம் எழுதிய ‘பரதப் பேராசான்கள்.’ ”

“வாங்கிய விருதுகள் நிறைவு தந்ததா?” “நோபல் வாங்கலையே”

“பெரியார்?” “புதிய வழிகாட்டி.”

“சிறந்த சிறுகதை எழுத்தாளர்?” “ஆன்டன் செக்காவ்.”

“பெரும் பேறு என்பது?”  “மனைவி வாய்ப்பது.”

“பிடித்தத் தெலுங்குப் பாடல்?”  “மங்களம்.”

“கோவில்பட்டி என்றதும் நினைவில் வருவது?”
“கோவில்பட்டி மேடும் அந்தக் குருமலைக் காற்றும்.”

“காமம் என்பது?”  “தவிர்க்க முடியாதது.” “தாய்மை?” “நமது ஜனனம்.”

“ஆசிரியர்?” “நான் தவிர்க்க வேண்டிய பதவி.”

“பருத்திக்காட்டில் கடைசியாக இறங்கி நின்றது?”
“புதுவைக்கு வரும் முன்  ஒருநாள் மதியத்தில்.”

“கு.அழகிரிசாமி இப்போதிருந்தால்?” “இன்னும் புகழோடு இருப்பான்.”

“நீங்கள் எண்ணி எண்ணி வருந்தும் தங்களின் தவறு?”
“சித்தி வீட்டில் பிறந்தது.”

“கிரா 95?” “அதைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாது.”

“குளித்துக் கொண்டாடியது?” “பொருனை ஆற்றில். (தாமிரபரணி)”

“அடிக்கடி நினைவில் வரும் பாட்டு வரி?”
“பாட்டு வரிகள் மாறிக்கொண்டே இருக்கும். மெட்டுகள்தான் நிற்கும்.”

“தி.க.சி - டி.கே.சி?”  “அரசியல் - ரசிகம்”